டிசம்பர் 20, புதுடெல்லி (New Delhi): நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து 2 பேர் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து கீழே குதித்து, கண்ணீர் புகை குண்டு குப்பிகளை வீசினர். இதனை தொடர்ந்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைப் பற்றி விவாதம் நடத்தக் கோரி மக்களவையில் போராட்டம் நடத்தியதால், எதிர்க்கட்சிகளை சேர்ந்த 141 எம்பிக்கள் நேற்று வரை இடைநீக்கம் செய்யப்பட்டனர். Earthquake Tips: நிலநடுக்கம் ஏற்பட்டால் நாம் செய்ய வேண்டியது., பாதிப்புகளை தவிர்க்க எடுக்கவேண்டிய நடவடிக்கை என்ன?.. முழு விபரம் இதோ.!
மேலும் 2 எம்.பி.க்கள் இடைநீக்கம்: இந்நிலையில் மக்களவையில் இருந்து இன்று மேலும் 2 எம்.பி.க்கள், அதே காரணத்திற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களான சி. தாமஸ் மற்றும் ஏஎம். ஆரிப் ஆவர். இன்றுடன் சேர்த்து மக்களவையில் 97 உறுப்பினர்களும், ராஜ்யசபாவில் 46 உறுப்பினர்களும் என இதுவரை மொத்தம் 143 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.