மே 02, திருவனந்தபுரம் (Kerala News): கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் அருகே உள்ள சாஸ்தாம் கோட்டையை சேர்ந்த 44 வயது பெண்ணுக்கு கடந்த 12 வருடங்களாக அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக அவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், எதுவும் சரியாகததால் அவர் ஆஸ்துமாகவாக இருக்கலாம் என எண்ணி அவர் அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். Amazon Great Summer Sale Start: அமேசான் நிறுவனத்தின் கோடை கால ஆப்பர் இன்று முதல் தொடக்கம்..!

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் மற்றொரு சிகிச்சைக்காக கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பரிசோதனையில் அவரது நுரையீரலில் சிறிய அளவில் ஏதோ ஒன்று சிக்கி உள்ளது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு மேற்கொண்ட பரிசோதனையில், பெண்ணின் நுரையீரலில் தங்க மூக்குத்தியின் ஒரு சிறிய பாகம் உள்ளே சிக்கி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை, ரிஜிட் பிராங்கோஸ்கோப்பி (Rigid Bronchoscopy) எனும் அறுவை சிகிச்சையின் மூலம், மூக்குத்தியை வெளியே அகற்றினர். மேலும், அந்த பெண் நலமாக இருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'கடந்த 12 வருடங்களுக்கு முன் நான் அணிந்திருந்த மூக்குத்தியின் ஒரு பாகம் காணாமல் போனது. அதனை நான் பல இடங்களில் தேடியும் அப்போது கிடைக்கவில்லை. ஆனால், என் நுரையீரலீல் சிக்கி இருந்து தற்போது அது அகற்றப்பட்டது' என்றார். மேலும், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவிக்கையில், 'அவர் உறங்கும் போது இவ்வாறு பாகம் உடைந்து வாய் வழியாக சென்றிருக்க வாய்ப்புள்ளது' என தெரிவித்துள்ளார்.