மே 09, நாசிக் (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக் நகர், கோனார்க் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அஸ்வினி நிகும்ப் (வயது 30). இவருக்கு ஆராத்யா (வயது 8) மற்றும் அகஸ்தியா (வயது 2) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். Auto-Government Bus Accident: கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது நேர்ந்த சோகம்; கணவன் - மனைவி பலி..!

இந்நிலையில், அஸ்வினி திடீரென அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை (Suicide) செய்துகொண்டுள்ளார். இந்நிகழ்வு நேற்று காலை 7 மணியளவில் நடந்துள்ளது. இதனையடுத்து, அங்கு வசிப்பவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் அஸ்வினியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்கு அவரது 2 குழந்தைகளும் இறந்து கிடந்துள்ளனர். அங்கு அஸ்வினி எழுதி வைத்த கடிதம் ஒன்றும் கிடைத்தது. அதில், தனது கணவர் ஸ்வப்னில் தன்னை கொடுமை செய்வதாக கூறி இவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

மேலும், அவர் தற்கொலை செய்வதற்கு முன்பாக தனது உறவினர்களுக்கு ஒரு வீடியோ அனுப்பியுள்ளார். அதில், தனது கணவர்தான் தற்கொலை காரணம் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவரது கணவர் ஸ்வப்னில் புனேவில் வேலை பார்த்து வந்துள்ளார். அவரை விசாரணைக்கு வர சொல்லி காவல்துறையினர் கூறியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.