Laddu | CM Chandrababu Naidu (Photo Credit: @TimesAlgebraIND X)

செப்டம்பர் 19, திருப்பதி (Andhra Pradesh News): ஆந்திராவில் உள்ள திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் புனித பிரசாதமான லட்டுகளுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுவாமியின் லட்டுகளுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலும் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. இதற்கிடையே, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு லட்டு விற்கப்படுவது நடந்து வருகிறது. இந்நிலையில், முந்தைய ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. One Nation One Election: மீண்டும் குரலை உயர்த்தும் "ஒரே நாடு ஒரே தேர்தல்" விவகாரம்.. முந்தைய வரலாறு என்ன?..!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்றக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு (Andhra Pradesh CM Chandrababu Naidu), “முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருமலை திருப்பதி கோயில் லட்டுகள் (Tirupati Laddoos) தரமற்ற பொருட்களால் செய்யப்பட்டவை. குறிப்பாக, நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது லட்டு செய்வதற்கு சுத்தமான நெய் பயன்படுத்தப்படுகிறது. மற்றும் கோயில் வளாகம் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டு பக்தர்கள் மத்தியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த குற்றச்சாட்டுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, சந்திரபாபு நாயுடுவுக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க தரமற்ற நெய் வழங்கியதாக திண்டுக்கல் ஏஆர் டயரி புட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு திருப்பதி தேவஸ்தானம் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.