ஜூலை 09, மும்பை (Mumbai): மும்பையை சேர்ந்த ஒரு பெண் கனடா சென்று வேலை செய்ய திட்டமிட்டுள்ளார். அவருக்கு கனடா வேலை விசா (Canada work visa) வாங்கி தருவதாக ரீனா ஷா மற்றும் கௌரவ் ஷா தம்பதியினர் உறுதி அளித்துள்ளனர். வேலை விசா கட்டணமாக அந்தப் பெண்ணிடம் ஏழு லட்சத்து பதினாறாயிரம் ரூபாய் வாங்கியுள்ளனர். ஆனால் அந்தப் பெண்ணிற்கு உரிய நேரத்தில் விசா வழங்கப்படவில்லை. TN Weather Update: தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
இதனால் சந்தேகம் அடைந்த அவர் மல்லாட்டை சேர்ந்த காவல்துறையினரிடம் வழக்கு பதிவு செய்துள்ளார். அப்பெண்ணின் புகாரின் பேரில் ரீனா ஷா மற்றும் கௌரவ் ஷா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. முதற்கட்டல் விசாரணையில் 2023 முதல் ஜூன் 2024 வரை இத்தம்பதியினர் 40 பேரிடம் ரூபாய் ஒரு கோடியே 63 லட்சம் மோசடி செய்து வசூலித்ததாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுவரை 40 புகார் தாரர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் 25க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர்.