Card (Photo Credit: Pixabay)

ஜனவரி 21, புதுடெல்லி (Technology News): வங்கிக் கணக்கிலுள்ள நமது பணத்தை எங்கு வேண்டுமானாலும் ஏடிஎம் மூலம் தேவைப்படும் போது எடுத்துக் கொள்கிறோம். அதற்கு வங்கிகள் டெபிட் கார்டுகளை வழங்குகின்றன. மேலும் ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் போதும் இந்த டெபிட் கார்டுகள் கட்டாயம் தேவைப்படுகிறது. இதன் மேல் இருக்கும் 16 இலக்க எண்கள், சிவிவி எண் தான் முக்கியமாக அனைத்து இடங்களிலும் கேட்கப்படும் எண்கள். இந்த எண் எதைக் குறிக்கிறது தெரியுமா? வங்கிகளில் அக்கவுண்ட் எண்கள், வங்கியின் கணக்கு விவரம், தனிப்பட்ட விவரம், வங்கிக் கணக்கில் நடக்கும் பணப் பரிவர்த்தனைகளைக் குறிக்கும். அதே போல், டெபிட் கார்டில் உள்ள எண்கள் அந்த கார்ட் ஹோல்டரின் வங்கி விவரம் மற்றும் தனிப்பட்ட விவரங்களையும் உள்ளடக்கியுள்ளது.

16 இலக்க எண்:

இந்த கார்டின் எண்களில் முதல் 6 எண்கள் ‘Bank identification number’ ஆகும். அதவாது இந்த எண்கள் அந்த கார்டை விநியோகித்த நிறுவனத்தைக் குறிக்கும். ( எ.கா: Master card, Rupay, visa ). மீதி 10 இலக்க எண்களும் வங்கி கணக்கின் விவரங்களைக் கொண்டுள்ளது. Contact Lens Care: லென்ஸ் அணிபவர்களின் கவனத்திற்கு.. நம் கவனத்தில் கொள்ள வேண்டிய எச்சரிக்கைகள்..!

பாதுகாப்பு அளிக்கும் CVV எண்:

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளின் பின்புறத்தில் CVV எண் என்ற மூன்று இலக்க எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அது எதற்காக என்று யோசித்திருக்கிறீர்களா? Card verification value என்பதன் சுருக்கமே CVV ஆகும். இது இரு பகுதிகளாக கொடுக்கப்பட்டிருக்கும். ஒன்று அனைத்து தனிப்பட்ட விவரங்களை கொண்டு இருக்கும். இந்த எண்கள் கார்டில் காந்தப்பட்டையால் மறைத்து கொடுக்கப்பட்டிருக்கும். மற்றொன்று நாம், 3 இலக்க பரிவர்த்தனைக்காக பயன்படுத்தும் எண்ணாகும். இந்த எண் பண மோசடிகளைத் தடுக்கப் பயன்படுகிறது. வங்கிகளின் விவரம் முழுவதும் தெரிந்திருந்தாலும், சிவிவி எண்கள் இல்லை எனில் கார்டு மூலம் பணம் எடுக்க முடியாது. ஒடிபி, யுபிஐ, ஏடிஎம் பின் நம்பர் போன்று CVV எண்ணும் யாரிடமும் பகிரக்கூடாத ஒன்றாகும்.