Karwa Chauth (Photo Credit: Wikipedia)

டிசம்பர் 22, டெல்லி (Delhi): கணவரின் நலன் வேண்டி பெண்கள் அனுசரிப்பது தான் கர்வா சவுத் விரதம். தமிழகத்தில் காரடையான் நோன்பாக இந்த விரதம் கடைபிடிக்கப்படுகின்றது. சம்பத் கவுரி விரதம், காமாட்சி நோன்பு, சாவித்ரி விரதம், சுமங்கலி நோன்பு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விரதம் மூலம் கணவன் மனைவி இடையே ஒற்றுமையும், மாங்கல்ய பலமும், நீண்ட ஆயுள், ஆரோக்ய, ஐஸ்வர்யமும் உண்டாகும் என்பது காலம் காலமாக இருந்து வரும் ஐதீகம். இந்த விரதம் வடநாட்டில் கர்வா சவுத் (Karwa Chauth ) என்ற பெயரில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கர்வா சவுத் விரதமன்று பெண்கள் உணவு உண்ணாமல் நோன்பு இருந்து இரவு சல்லடையில் தீபம் ஏற்றி நிலவு பார்த்து பின்னர் கணவனை அச்சல்லடை வழியாக பார்ப்பார்கள். Winter Solstice: இந்த ஆண்டின் மிக நீண்ட இரவு... மாலை வானில் நிகழப் போகும் ஆச்சர்யம்..!

டெல்லி நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு: இந்நிலையில் டெல்லி குடும்ப நீதிமன்றத்தில் ஒரு நபர் தன் மனைவி கர்வா சவுத் விரதம் அன்று விரதம் எடுக்காத காரணத்தினாலும், வீட்டில் குங்குமம், வளையல், தாலி போன்றவற்றை அணியாமல் விதவைப் போன்று இருப்பதாலும், தங்களுக்கு விவாகரத்து அளிக்குமாறு 2009 ஆம் ஆண்டு மனு கோரி இருந்தார். அதன்படி அந்த நீதிமன்றம் விரதம் எடுக்காமல் இருப்பது குற்றம் என்று விவாகரத்து வழங்கியது. ஆனால் இம்மனுவின் கோட்பாடுகளை மறுபரிசீலனை செய்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார் கைட் மற்றும் நீனா பன்சால் கிருஷ்ணா, அளித்த தீர்ப்பானது தற்போது வைரலாகி வருகிறது. பெண்கள் கர்வா சவுத் அன்று விரதம் எடுப்பதும் எடுக்காததும் அவர்கள் தனிப்பட்ட உரிமையாகும். விரதம் எடுக்காமல் இருப்பது குற்றம் ஆகாது என்று தெரிவித்துள்ளனர்.