Taj Express Train Fire (Photo Credit: @ndtv X)

ஜூன் 03, புதுடெல்லி (New Delhi): தென்கிழக்கு டெல்லியின் சரிதா விஹார் பகுதியில் தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலின் (Taj Express) 2 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே துறை அதிகாரிகள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப்பணியிலும் ஈடுபட்டுள்ளனர். Kedar Jadhav Retirement: அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஒய்வை அறிவித்த கேதர் ஜாதவ்.. ரசிகர்கள் சோகம்..!

அதே சமயம் துக்ளகாபாத் - ஓக்லா இடையே இயக்கப்படும் தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணித்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர் என வடக்கு ரயில்வேயின் முதன்மை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.