Bangla Bandh (Photo Credit: @ndtv X)

ஆகஸ்ட் 28, கொல்கத்தா (Kolkata): மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளிகளாகவும், சுமார் 1,500 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். இங்குள்ள மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்பு பயிலும் பெண் மருத்துவர் (வயது 28) கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு பணியில் இருந்தார். அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்க கூடத்தில் அவர் தூங்க சென்றார். கடந்த 9-ம் தேதி கருத்தரங்கு அரங்கில் பிணமாக மீட்கப்பட்டார். இவரை பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கிறார்கள். பிரேத பரிசோதனையில், பெண்ணின் அந்தரங்க உறுப்புகள், முகம், உதடுகள், கழுத்து, வயிறு, விரல்கள் மற்றும் கணுக்கால் ஆகிய இடங்களில் காயங்கள் இருந்ததிருக்கின்றன.

மருத்துவர் கொலை: இந்த வழக்கில் (Doctor Rape And Murder) முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் சஞ்சய் ராய். கைது செய்யப்பட்ட இவர், விசாரிக்கப்பட்டு வருகிறார். சஞ்சய் ராயுக்கு 4 முறை திருமணம் நடந்துள்ளதாகவும் அவரின் மோசமான நடத்தை காரணமாக 3 மனைவிகள் விட்டு சென்றதகாகவும், நான்காவது மனைவி புற்றுநோயால் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது செல்போனை ஆய்வு செய்தபோது இயற்கைக்கு மாறான பாலியல் உறவு கொண்ட ஏராளமான வீடியோக்கள் இருந்தன. Hema Committee Report: கேரள சினிமாவில் பாலியல் தொல்லை.. ஆவேசத்தில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி..!

நபன்னா அபிஜான்: பெண் மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டு பச்சிம்பங்கா சத்ரா சமாஜ் எனப்படும் பதிவு செய்யப்படாத புதிய மாணவர் அமைப்பு நபன்னா அபிஜான் (Nabanna Abhijan) என்ற பெயரில் நேற்று மாபெரும் பேரணி நடத்தியது. மருத்துவரின் கொலைக்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலகக்கோரி மாணவர் அமைப்பினர் பேரணி நடத்தினர். அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி, தண்ணீரை பீய்ச்சியடித்தனர். இதில் 100 மாணவர்களும், 15 காவலரும் காயமடைந்தனர்.

மாபெரும் பேரணி: இந்நிலையில் மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து 28-ம் தேதி (இன்று) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரத்துக்கு மேற்கு வங்கம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் சுகாந்த் மஜும்தார் நேற்று அறிவித்தார். அதன்படி இன்று காலை 6 மணிக்கு பந்த் தொடங்கியது.