![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2024/01/swiggy-380x214.jpg)
ஜனவரி 29, புதுடெல்லி (New Delhi): பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி (Swiggy) கடந்த ஆண்டு 380 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அப்போது நிறுவனத்தின் மந்தமான வளர்ச்சி மற்றும் அதிகளவில் ஊழியர்களை சேர்த்தது அதற்கு காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது 400 ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது. இது மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 6 விழுக்காடு ஆகும். மேலும் தொழில்நுட்பம் வாடிக்கையாளர் சேவை, கால் சென்டர், நிர்வாகம் உள்ளிட்ட பிரிவுகளில் ஆட்குறைப்பு செய்வதாக ஸ்விக்கி நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்தடுத்த வாரங்களின் கொஞ்சம் கொஞ்சமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஸ்விகி கூறியிருக்கிறது. Road Accident: செங்கல்பட்டில் அடுத்தடுத்து 5 கார்கள் மோதி விபத்து... போக்குவரத்து நெரிசலால் ஏற்பட்ட விபரீதம்..!