ஜனவரி 15, உத்தரப்பிரதேசம் (Uttar Pradesh): பிரபல உருது கவிஞர் முனவ்வர் ராணா (Munawwar Rana) (வயது 71), நீண்ட காலமாக புற்றுநோய் மற்றும் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக லக்னாவில் உள்ள எஸ்ஜிபிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Jio Airtel 5G Network: 5ஜி ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு வந்தது அதிர்ச்சி செய்தி: அதிரடியாக உயரும் ரீசார்ஜ் கட்டணம்.!
முன்னவர் ராணா அவர்கள் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலியில் கடந்த 1952 ஆம் ஆண்டு பிறந்தவர். தன் வாழ்நாள் முழுவதும் உருது இலக்கியம் மற்றும் கவிதைகளில் தன்னை ஈடுபடுத்தி, அதன் மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தினையே வைத்திருந்தவர். இவரின் மிகவும் பிரபலமான கவிதை மா ஆகும்.
மேலும் இவருக்கு இந்திய அரசு 2014 ஆம் ஆண்டின் மதிப்புமிக்க சாகித்ய அகாடமி விருதினை அளித்தது. ஆனால் நாட்டில் நிலவி வரும் சகிப்பின்மை குறித்த கவலைகள் காரணமாக அடுத்த வருடமே அந்த விருதினை திருப்பி அளித்தார். இவரது கவிதைகள் பல விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது. அது மட்டும் இன்றி இவரது படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவர் உயிரிழந்ததுள்ளது அனைத்திந்திய மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.