RAPID INSAT (Photo Credit: @ANI X)

டிசம்பர் 26, புதுடெல்லி (New Delhi): வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையானது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சில பகுதிகளில் மைனஸில் வெப்பநிலை பதிவாகி உள்ளது. அதிலும் இன்று காலை நிலவிய பனி மூட்டத்தால் டெல்லியில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவு சாலைகளில் பனி சூழ்ந்தது. இதன் காரணமாக சர்வதேச விமானங்கள் உட்பட சுமார் 30 விமானங்களுக்கான வருகை மற்றும் புறப்பாடு தாமதமானது. Nigeria Civilians Killed: தாயின் முதுகில் கதறும் குழந்தையின் அழுகுரல்; கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட 160 பேர்.. நைஜீரியாவில் நடந்த பயங்கரம்.!

ஆரஞ்சு அலர்ட்: அதுமட்டுமின்றி பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பனிமூட்டம் பரவுவதை காட்டும் செயற்கைக்கோள் படங்களை இந்திய வானிலை மையம் வெளியிட்டது. மேலும் இந்த அடர்ந்த மூடு பனியால் மக்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த பனியானது இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் (Orange Alert) விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு அலர்ட் என்பது 50 மீட்டர் குறைவான தொலைவில் உள்ள பொருட்களை மட்டுமே பனியில் பார்க்க முடியும் என்பது ஆகும்.