ஜனவரி 15, புதுடெல்லி (New Delhi): பிரபல உருது கவிஞர் முனவ்வர் ராணா (Munawwar Rana) (வயது 71), நீண்ட காலமாக புற்றுநோய் மற்றும் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக லக்னாவில் உள்ள எஸ்ஜிபிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஜனவரி 14ம் தேதி அவர் காலமானார். இவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். IND vs AFG 2nd T20I: சிக்ஸர்களை பறக்கவிட்ட ஷிவம் துபே.. தொடரை வென்ற இந்தியா..!
பிரதமர் மோடி இரங்கல்: தற்போது இந்த மாபெரும் கவிஞரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) எக்ஸ் தளம் வழியாக இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர் வெளியிட்டுள்ள பதிவில், "முனவ்வர் ராணா ஜியின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர் உருது இலக்கியம் மற்றும் கவிதைக்காக சிறந்த பங்களிப்பை வழங்கினார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் என்னுடைய இரங்கல்களைத் தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
Pained by the passing away of Shri Munawwar Rana Ji. He made rich contributions to Urdu literature and poetry. Condolences to his family and admirers. May his soul rest in peace.
— Narendra Modi (@narendramodi) January 15, 2024