PM Modi Crying Video (Photo Credit: @ANI X)

ஜனவரி 19, மகாராஷ்டிரா (Maharashtra): நிதியுதவி, ஓய்வூதியம் போன்றவைகளுடன், வீட்டு வசதியையும் ஏற்படுத்தி தரும் திட்டம் தான் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY). கிராமப்புற வீட்டுவசதி பற்றாக்குறையை தீர்ப்பதுடன், ஏழைகளுக்கு தரமான வீட்டு வசதியை மேம்படுத்துவதுதே இந்த திட்டத்தின் சாராம்சமாகும். இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2015ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் இதுவரையில் 75 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. Nayanthara Opens Up: அன்னபூரணி படத்திற்கு தடை.. அறிக்கை வெளியிட்ட லேடி சூப்பர்ஸ்டார்..!

கண்கலங்கிய பிரதமர் மோடி: இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள், கைத்தறி தொழிலாளர்கள், விற்பனையாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கந்தல் எடுப்பவர்கள், பீடி தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் போன்ற பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் மக்களிடம் உரையாற்றும் போதே, நெகிழ்ச்சியில் திடீரென பிரதமர் மோடி கண்கலங்கி விட்டார்.