ஜனவரி 17, குருவாயூர் (Kerala News): நேற்று பிரதமர் மோடி ஆந்திராவிற்கு சென்று பல அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இன்று கேரளா வந்துள்ளார். கேரளாவிலும் பல அரசு நல திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். ஏற்கனவே கடந்த மூன்றாம் தேதி கேரளாவில் சுற்றுப்பயணம் செய்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக பிரதமர் மோடி கேரளா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. MGR 107th Birth Anniversary: தமிழ் மக்களின் இதயத்தில் இருந்து நீங்கா இதயக்கனி.. எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி ட்விட்.!
குருவாயூர் கோவிலில் வழிபாடு: பிரதமர் மோடி இன்று காலை குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் (Guruvayur Temple) வழிபாடு நடத்தினார். வழிபாட்டிற்காக கொச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குருவாயூருக்கு வந்து சேர்ந்தார். தொடர்ந்து குருவாயூர் கோவிலில் நடந்த முன்னாள் பாரதிய ஜனதா கட்சி எம்பி ஆன நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மணமக்களை மனதார வாழ்த்தினார். மேலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் சுரேஷ் கோபி தங்க தகடு ஒன்றினை பரிசாக வழங்கினார். அது மட்டும் இன்றி அங்கிருந்த பல மணமக்களையும் பிரதமர் மோடி வாழ்த்தினார். பிரதமரின் வருகையை முன்னிட்டு குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
#WATCH | Kerala: Prime Minister Narendra Modi visits Guruvayur Temple in Thrissur district and blesses a newly wedded couple in the temple. pic.twitter.com/JQg1Cz0QQ5
— ANI (@ANI) January 17, 2024