ஜனவரி 16, Anantapur (அனந்தபூர்): பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ஆந்திரா சென்றார். மேலும் அங்குள்ள அனந்தபூர் மாவட்டம்,லேபாக்ஷியில் உள்ள வீரபத்ரா கோவிலில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார். அதுமட்டுமின்றி தெலுங்கில் உள்ள ரங்கநாத ராமாயணத்தின் வசனங்களை கேட்டார். தற்போது அந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. Antibiotics: ஆன்டிபயாடிக் மாத்திரை அடிக்கடி சாப்பிடலாமா?.. அதனால் வரும் பாதிப்புகள் பற்றி தெரியுமா?.!
#WATCH | Prime Minister Narendra Modi listens to verses from the Ranganatha Ramayan at the Veerbhadra Temple in Lepakshi, Andhra Pradesh pic.twitter.com/N7i25CTS1n
— ANI (@ANI) January 16, 2024
ஸ்ரீ ராமர் பஜனை பாடி பரவசம்: அதனைத் தொடர்ந்து வீரபத்ரா கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி ‘ஸ்ரீ ராம் ஜெய் ராம்’ பஜனை பாடினார். அயோத்தி ராமர் கோயிலின் பிரம்மாண்ட கும்பாபிஷேக விழா நடைபெற இன்னும் 6 நாட்கள் உள்ள நிலையில், ராமாயணத்தில் சிறப்பு வாய்ந்த லெபாக்ஷிக்கு மோடி சென்றுள்ளது குறிபிடத்தக்கது. சீதா தேவியை கடத்திச் சென்ற ராவணனால் படுகாயமடைந்த ஜடாயு பறவை விழுந்த இடம் லேபாக்ஷி என்று கூறப்படுகிறது.
#WATCH | Prime Minister Narendra Modi sings 'Shri Ram Jai Ram' bhajan at the Veerbhadra Temple in Lepakshi, Andhra Pradesh pic.twitter.com/6F0lyyQSXN
— ANI (@ANI) January 16, 2024