செப்டம்பர் 12, சென்னை (Sports News): இந்திய தடகள சங்கம் மற்றும் தமிழ்நாடு தடகள சங்கம் இணைந்து நடத்தும் 4-வது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் (South Asian Junior Athletics Championship) போட்டித் தொடர், சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் (Nehru Indoor Stadium) நேற்று (செப்டம்பர் 11) தொடங்கி வரும் 13-ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், பூடான், நேபால், மாலத்தீவு என 7 நாடுகளிலிருந்து 28 வகையான விளையாட்டு போட்டிகளில் மொத்தம் 210 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டிகள் அனைத்தும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறுகிறது.
அரசு வேலைவாய்ப்பு:
இந்தியாவில் இருந்து சுமார் 62 வீரர்கள் பங்கேற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இருந்து 9 பேர் பங்கேற்றுள்ளனர். சுமார் 29 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு தடகள சங்கம் சர்வதேச தொடரை நடத்துகிறது. கடந்த 1995-ஆம் ஆண்டு கடைசியாக சர்வதேச தடகள தொடர் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டியினை தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (Minister Udhayanidhi Stalin) அவர்கள் துவக்கி வைத்து, வீரர்களின் அணிவகுப்பை பார்வையிட்டார். இந்த தொடரை நடத்துவதற்காக ரூ.3.67 கோடி விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. மேலும், விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக வேலைவாய்ப்பில் 3 சதவிகித அரசு வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டையும் தமிழ்நாடு அரசு வழங்குவதாக அறிவித்துள்ளது. Paralympics 2024: பாராலிம்பிக்கில் 29 பதக்கங்களை வென்ற இந்தியா; தாயகம் திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு..!
தமிழக வீராங்கனை சாதனை:
இதனையடுத்து, நேற்று மாலை நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தினர். தொடர்ந்து முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தது. மேலும், தமிழக வீராங்கனை அபிநயா ராஜராஜன் (Abinaya Rajarajan) 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 11.77 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.
தலைவர்கள் பங்கேற்பு:
இதன் தொடக்க விழாவில், ஆசிய தடகள கூட்டமைப்பின் தலைவர் தாஹாலன் ஜுமன் அல்-ஹமத், தெற்காசிய தடகள கூட்டமைப்பின் தலைவர் லலித் கே பனோட், மற்றும் இளைஞர் நலன் கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு தடகள சங்கத் தலைவர் தேவாரம், செயலாளர் லதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தடகள வீராங்கனை அபிநயா தங்கம் வென்று அசத்தல்:
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் தங்கமகள்❤️❤️👏👌👌💐💐🏆🏆🏆 pic.twitter.com/t0UCgIWuw2
— மண்வாசனை (@isaithalattu) September 12, 2024
100 மீட்டர் தடகளப் போட்டியில் தமிழக வீராங்கனை முதலிடம்:
RECORD!!!
Abinaya Rajarajan won gold medal with a record time of 11.77 seconds at SAAF Jr meet in Chennai. Previous mark 11.92 seconds.
V Sudheeksha (right) won silver 11.92 secs.@Adille1 pic.twitter.com/r85XVwu1VD
— Athletics Federation of India (@afiindia) September 11, 2024