ஏப்ரல் 19, புதுடெல்லி (New Delhi): எத்திலீன் ஆக்சைடு (Ethylene Oxide) ஆனது அழகு சாதன பொருட்கள், ஷாம்புகள் மற்றும் வாசனை திரவியங்கள் போன்றவைகளில் சேர்க்க கூடியது. இதனை மனிதர்கள் உட்கொள்வது அவர்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். அதாவது புற்றுநோய் உருவாக்கம், இனப்பெருக்க விளைவு, போன்ற பல பிரச்சனைகளை உடலுக்கு ஏற்படுத்தக் கூடியது. இப்படிப்பட்ட எத்திலீன் ஆக்சைடு ஆனது எவரெஸ்ட் மீன் கறி மசாலாவில் (Everest Fish Curry Masala) கண்டுபிடிக்கப்பட்டது. TN Weather Report: தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் தகவல்..!

பொதுவாக சிங்கப்பூரில் எத்திலீன் ஆக்சைடை மசாலா பொருட்களை கிருமி நீக்கம் செய்வதற்கு பயன்படுத்துகின்றனர். இருப்பினும் எவரெஸ்ட் கறி மசாலாவில் அது அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருப்பதால் அதை திரும்ப பெறுமாறு அந்த தயாரிப்பில் இறக்குமதி ஆளரான முத்தையா அண்ட் சன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் உணவு நிறுவனம் எவரெஸ்ட் மீன் கறி மசாலாவை திரும்ப பெறுகிறது.