ஜூன் 14, ராஜஸ்தான் (Rajasthan News): சில மாதங்களுக்கு முன்பு எம்.டி.ஹெச் மற்றும் எவரெஸ்ட் (MDH and Everest) ஆகிய இந்திய நிறுவனங்களின் மசாலா தயாரிப்புகளை ஹாங்காங் உணவுப் பாதுகாப்பு மையம் சோதனை செய்தது. அந்த சோதனையில், எம்.டி.ஹெச் நிறுவனத்தின் தயாரிப்புகளான மெட்ராஸ் கறித்தூள், சாம்பார் மசாலா, குழம்புப் பொடி மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் மீன் குழம்புப் பொடி ஆகியவற்றில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய எத்திலீன் ஆக்ஸைடு என்ற பூச்சிக்கொல்லி சேர்க்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்தத் தயாரிப்புகளை சமையலில் சேர்த்து உண்ணும்போது உடல்நல பிரச்னைகள் உண்டாவதோடு, புற்றுநோய் வருவதற்கான ஆபத்துகளும் உள்ளன. G7 Summit: இத்தாலியில் தொடங்கிய ஜி7 மாநாடு.. உலக தலைவர்கள் பங்கேற்பு..!
இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனங்களில் விற்பனையை ஹாங்காங் தடை செய்தது. பின்னர் இந்த நிறுவனத்திற்கு சிங்கப்பூரிலும் தடை விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆணையம் எவரெஸ்டின் சாம்பார் மசாலா மற்றும் கரம் மசாலாவை சந்தையில் இருந்து திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டது. இதனால் இதுகுறித்து ராஜஸ்தானில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் எம்.டி.ஹெச் மற்றும் எவரெஸ்ட் நிறுவனங்கள் தயாரித்த மசாலாப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.