ஜனவரி 10, புவனேஸ்வர் (Bhubaneswar): இந்தியாவில் ஒவ்வொரு வட்டார பகுதியில் உற்பத்தி செய்யக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக புவிசார் குறியீடு (GI Tag) வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மதுரை மல்லி, வீரவநல்லூர் செடிபுட்டா சேலைகள், ஆத்தூர் வெற்றிலை உள்பட பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. Moong Dal Idly: ஒரு முறை இந்த பாசிப்பருப்பு இட்லி செய்து பாருங்க... எவ்வளவு சுவை..!
இந்நிலையில், தற்போது மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒடிசா மாநிலத்தின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்னியில் புரதம், கால்சியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்ள் உள்ளன. இதனை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.