Supreme Court of India (Photo Credit: Wikipedia Commons)

ஆகஸ்ட் 20, புதுடெல்லி (New Delhi): மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளிகளாகவும், சுமார் 1,500 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். இங்குள்ள மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்பு பயிலும் பெண் மருத்துவர் (வயது 28) கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு பணியில் இருந்தார். அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்க கூடத்தில் அவர் தூங்க சென்றார். கடந்த 9-ம் தேதி கருத்தரங்கு அரங்கில் பிணமாக மீட்கப்பட்டார். இவரை பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கிறார்கள். பிரேத பரிசோதனையில், பெண்ணின் அந்தரங்க உறுப்புகள், முகம், உதடுகள், கழுத்து, வயிறு, விரல்கள் மற்றும் கணுக்கால் ஆகிய இடங்களில் காயங்கள் இருந்ததிருக்கின்றன.

மருத்துவர் கொலை: இந்த வழக்கில் (Doctor Rape And Murder) முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் சஞ்சய் ராய். கைது செய்யப்பட்ட இவர், விசாரிக்கப்பட்டு வருகிறார். சஞ்சய் ராயுக்கு 4 முறை திருமணம் நடந்துள்ளதாகவும் அவரின் மோசமான நடத்தை காரணமாக 3 மனைவிகள் விட்டு சென்றதகாகவும், நான்காவது மனைவி புற்றுநோயால் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது செல்போனை ஆய்வு செய்தபோது இயற்கைக்கு மாறான பாலியல் உறவு கொண்ட ஏராளமான வீடியோக்கள் இருந்தன. மருத்துவர் மரணத்துக்கு நீதி கோரி மேற்குவங்கம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியை புறக்கணித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். PM Modi To Visit Ukraine and Poland: இந்திய பிரதமர் மோடி போலந்து, உக்ரைன் நாடுகளுக்கு பயணம்..!

உச்ச நீதிமன்ற உத்தரவு: இதற்கிடையே, பெண் பயிற்சி டாக்டர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் எடுத்தது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கின் விசாரணை நிலையை அறிக்கையாக சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறினர்.

மேற்குவங்க அரசு உரிய முறையில் வழக்கை கையாளவில்லை. வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? காரணம் என்ன? மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கபடவில்லை, இதுபோன்ற நிலைமை கவலையை ஏற்படுத்துகிறது. மேற்படி எதிர்காலத்தில் இவ்வாறான துயரங்கள் நடக்காமல் பார்க்க வேண்டும். இன்னொரு துயரம் நடந்தால் தான் உரிய விசாரணை நடக்குமா? மருத்துவர்களின் பாதுகாப்புக்கு மணிலா அரசுக்கு அக்கறை இல்லையா?தொடர்ந்து அடுத்த விசாரணை நாளை மறுநாளுக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்ற உத்தரவிட்டது.