Ratan Tata Pet Dog Goa (Photo Credit: @NalinisKitchen X)

அக்டோபர் 15, மும்பை (Maharashtra News): டாடா நிறுவனத்தின் தலைவரான ரத்தன் டாடா (Ratan Tata), தனது 86-வது வயதில், அக்டோபர் 09-ஆம் தேதி, மும்பையில் (Mumbai) காலமானார். ரத்தன் டாடா விலங்குகள், குறிப்பாக நாய்கள் மீது அதீத பாசம் கொண்டவர் ஆவார். அவர் கோவா (Pet Dog Goa) என்ற நாயை தத்தெடுத்து அதனை அக்கறையோடு வளர்த்து வந்தார். இந்நிலையில், மறைந்த ரத்தன் டாடாவின் செல்ல நாய் ' கோவா ' இறந்ததாக சமூக வலைதளங்களில் பரவி வந்த ஒரு போலிச் செய்தியை மும்பை காவல்துறை மூத்த அதிகாரி சுதிர் குடால்கர் மறுத்துள்ளார். Deputy Collector Dies By Suicide: கேரளாவில் துணை கலெக்டர் தூக்கிட்டு தற்கொலை.. காரணம் என்ன..?

கோவா இறந்துவிட்டதாக ஒரு போலியான வாட்ஸ்அப் செய்தி பரவலாகப் பரவியது. அதில், "வருத்தமான செய்தி... டாடாவின் வளர்ப்பு நாய் கோவா இறந்து 3 நாட்களுக்குப் பிறகு இறந்துவிட்டது. அதனால்தான் மனிதர்களை விட நாய்கள் தங்கள் எஜமானர்களுக்கு விசுவாசமாக இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்!" என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை முற்றிலுமாக மறுத்து, ரத்தன் டாடாவின் நண்பரான சாந்தனு நாயுடுவிடமிருந்து நாயின் ஆரோக்கியத்தை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.