
பிப்ரவரி 06, புதுடெல்லி (New Delhi): 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி யூனியன் பிரதேச சட்டசபைக்கு நேற்று தேர்தல் (Delhi Assembly elections) நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் ஆம்ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அதிலும் ஆம் ஆத்மி கட்சி - பாஜக இடையேதான் உச்சபட்ச போட்டி இருக்கிறது. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. Fire Accident: தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; ரசாயன பேரல்கள் வெடித்து சிதறல்.. விஷவாயு பீதியில் ஓட்டம் பிடித்த பொதுமக்கள்..!
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு (Delhi Exit Poll):
கருத்துக்கணிப்புகளின் படி, 1998ஆம் ஆண்டுக்கு பின் பாஜக டெல்லி சட்டப்பேரவையை கைப்பற்றும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. 2013ஆம் ஆண்டுக்கு பின் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த ஆம் ஆத்மி கட்சி இம்முறை ஆட்சியை பறிகொடுக்கும் என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. வெளியான 10 கருத்துக்கணிப்புகளில் பெரும்பான்மையாக, அதாவது 7 கருத்துக்கணிப்புகள் பாஜகவே டெல்லியில் ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்துள்ளன. பாஜகவுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் 20-25 தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவலாம் எனவும் காங்கிரஸ் 3 தொகுதிகள் வரை கைப்பற்றவே வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளன.