Narendra Modi Meets President Droupadi Murmu (Photo Credit: @ANI X)

ஜூன் 7, புதுடெல்லி (New Delhi): 2024 மக்களவை தேர்தலில் 292 தொகுதிகளில் வெற்றியடைந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணி, 18 வது மக்களவை அரசை (Lok Sabha) ஏற்க பாஜக தயாராகி வருகிறது. 235 தொகுதிகளில் கூட்டணியுடன் வெற்றி அடைந்துள்ள காங்கிரஸ் கட்சி, பெரும்பான்மைக்கு தேவையான எஞ்சிய 37 தொகுதிகளை மாநில வாரியாக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளை வைத்து கைப்பற்றவும் காய் நகர்த்தி வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்கவும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

ஆலோசனை கூட்டம்: இந்த நிலையில், இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் (NDA Meeting) டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய அரங்கில் நடந்தது. அதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் அனைத்து தலைவர்களும், புதிதாக எம்பிக்களாக தேர்தெடுக்கப்பட்டவர்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி (Narendra Modi) தேர்வு செய்யப்பட்டார். இதனை ராஜ்நாத் சிங் முன்மொழிய அமித்ஷா வழிமொழிந்தார். மேலும் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க கூட்டத்தில் முன்மொழியப்பட்டது. TN Weather Forecast: தமிழகத்தின் நாளைய வானிலை குறித்த முன்னறிவிப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

குடியரசு தலைவியுடன் சந்திப்பு: இதனைத் தொடர்ந்து தற்போது கூட்டணி கட்சி தலைவர்களுடன் மோடி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை (Droupadi Murmu) சந்தித்தார். 3வது முறையாக ஆட்சி அமைக்க குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் உரிமை கோரிய நிலையில் குடியரசு தலைவரிடம் எம்பிக்கள் பட்டியலை மோடி அளித்தார். மேலும் ஜூன் 9-ஆம் தேதி மாலையில் குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறும் விழாவில் பிரதமராக மோடியும், அவரது அமைச்சரவையும் பதவியேற்பாா்கள் என கூறப்படுகிறது.