டிசம்பர் 24, மங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், மங்களூரில் (Mangaluru) உள்ள ஜம்பூர் கிராமத்தின் சோமவாரபேட்டியை சேர்ந்தவர் ஈஸ்வர் (வயது 32). இவர், சில நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (டிசம்பர் 22) காலை 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். Surat-Bangkok Flight: 4 மணிநேர பயணத்தில் 15 லிட்டர் சரக்கை காலி செய்த குடிமகன்கள்.. வீடியோ வைரல்..!
எலும்புகள் தானம்:
இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் ஈஸ்வரின் எலும்புகளை தானம் (Bone) செய்ய முடிவு செய்தனர். அதன்பின், காவல்துறையின் அனுமதி பெற்று அறுவை சிகிச்சை செய்து ஈஸ்வரின் உடலில் இருந்து, எலும்புகள் எடுக்கப்பட்டன. மருத்துவர் விக்ரம் ஷெட்டி தலைமையிலான மருத்துவர் குழு அறுவை சிகிச்சை செய்தனர். இதுகுறித்து டாக்டர் விக்ரம் ஷெட்டி கூறுகையில், 'இறந்த நபரின் எலும்புகள் தானம் பெறப்பட்டது. இது கர்நாடகாவில் முதன் முறை. மாநில மருத்துவ உலகில் புதிய மைல் கல்லாக இது இருக்கும். தானம் பெறப்பட்ட எலும்புகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6 சிறார்களுக்கு பொருத்தப்படும். மேலும், எலும்பு தானம் இளம் நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. எலும்புகளை தானம் செய்ய முன்வந்த பெற்றோரை நாங்கள் பாராட்டுகிறோம். எலும்பு தானம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' அவர் கூறினார்.