ஆகஸ்ட் 16, ஹாசன் (Karnataka News): கர்நாடக மாநிலம், ஹாசன் (Hassan) மாவட்டத்தை சேர்ந்த தம்பதி ஸ்ரீனிவாஸ் (வயது 43)-ஸ்வேதா (வயது 36). இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் இருந்தார். ஸ்ரீனிவாஸ் கால்டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவிஸ்வேதா பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், குடும்பத்தில் அதிக கடன் சுமை (Debt Problem) ஏற்பட்டுள்ளது. அதனை செலுத்த முடியாமல் தவித்து வந்த தம்பதி இருவரும் தற்கொலை (Suicide) செய்ய முடிவு செய்துள்ளனர். PM Modi on Independance Day 2024: "2047ல் வளர்ச்சியடைந்த இந்தியா" - சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி.!
இதனையடுத்து, தம்பதி இருவரும் தனது 13 வயது மகளுடன் கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி அன்று ஹேமாவதி கால்வாயில் () குதித்து குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பல நாட்களாக குடும்பத்தினர் காணாமல் போனதால், அவர்களது உறவினர்கள் ஆகஸ்ட் 13-ஆம் தேதி சன்பராயப்பட்டணா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர், தற்கொலை செய்துகொண்ட இடத்திலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் பாகூர் ஹோப்லியில் உள்ள கால்வாய் அருகே கணவன்-மனைவி இருவரின் சடலத்தை மீட்டனர். அவர்களது மகளின் சடலம் இன்னும் கிடைக்கவில்லை. அவரது உடலை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Loan defaulters can seek help!
RBI has clearly directed banks to handle such cases with empathy. But harassment & bullying from loan recovery agents can get unbearable!
A full family in #Karnataka’s Hassan died by suicide cuz the father, a cab driver couldn’t repay his #Loan… pic.twitter.com/2JaEn3nd1G
— Nabila Jamal (@nabilajamal_) August 15, 2024