அக்டோபர் 18, அரியானா (Haryana News): அரியானா மாநிலத்தில் கடந்த 05-ஆம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முதல் முறையாக 48 இடங்களை பாஜக கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து, 2-வது முறையாக, அரியானா மாநில முதல்-மந்திரியாக நயாப் சிங் சைனி (CM Nayab Singh Saini) பதவியேற்றார். இந்நிலையில், பாஜகவின் முதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை (Dialysis Treatment) வழங்கப்படும் என்று அரியானா அரசு இன்று (அக்டோபர் 18) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Worker Shot Dead: புலம்பெயர்ந்த தொழிலாளி தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை.. தொடரும் சோக சம்பவம்..!
இதுதொடர்பாக, செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் நயாப் சிங் சைனி கூறுகையில், 'முதல் மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு கோப்பில் நான் கையெழுத்திட்ட முதல் கையெழுத்து, சிறுநீரக நோயாளிகள் தொடர்பானதுதான். அரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இன்று முதல் இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும். டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள நோயாளிகளுக்கு மாதம் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை செலவு ஏற்படுகின்றது. இப்போது, அந்த செலவை அரியானா அரசே ஏற்கும்' என தெரிவித்தார்.