Woman Body Found in Garbage Truck (Photo Credit: @nabilajamal_ X)

ஜூன் 30, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், பெங்களூருவில் (Bengaluru) மாநகராட்சி குப்பை வண்டி, வழக்கம் போல ஸ்கேட்டிங் மைதானத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருக்கும். அதன்படி, வழக்கம்போல் இரவு ஓட்டுநர் அங்கு வண்டியை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர், மறுநாள் காலை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் குப்பை போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது, சாக்கு பையில் ஒரு பெண்ணின் தலை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். Avinashi Dowry Case: "என்னால முடியலப்பா.., டார்ச்சர் பன்றாங்க" - திருமணமான 78 நாளில் தற்கொலை..!

இளம்பெண் சடலமாக மீட்பு:

உடனடியாக, அவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது, பெண்ணை கொலை (Murder) செய்து அவரது கை கால்களை கட்டி சாக்கு பையில் வைத்திருந்தது தெரியவந்தது. அவர் அணிந்திருந்த டி-ஷர்ட்டை வைத்து, அவர் பணிபுரிந்த நிறுவனம் மூலம் அப்பெண்ணை அடையாளம் கண்டனர். அவர், புஷ்பா என்கிற ஆஷா என தெரியவந்தது.

போலீஸ் விசாரணை:

இதனையடுத்து, பிரேத பரிசோதனையில் மர்ம நபர்கள் சிலர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்து கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, உயிரிழந்த புஷ்பாவின் கணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.