
ஜூன் 30, அவிநாசி (Tiruppur News): திருப்பூர் மாவட்டம், அவிநாசி (Avinashi) பகுதியில் உள்ள கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர், பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரிதன்யா (வயது 27). கடந்த 3 மாதத்திற்கு முன்பு, இவருக்கும் ஜெயம் கார்டன் பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவருக்கும், திருமணம் நடந்தது. அப்போது, திருமணத்திற்கு வரதட்சணையாக (Varathatchanai Kodumai) 300 பவுன் நகை அளித்ததாக கூறப்படுகிறது. அந்தரங்க உறுப்பில் பழச்சாறு ஊற்றி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. கள்ளக்காதல் விவகாரத்தில் பயங்கரம்.!
வரதட்சணை கொடுமை (Dowry Suicide News in Tiruppur):
இந்நிலையில், திருமணமான பின்பு 500 பவுன் நகை வாங்கி வா என கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ரா தேவி ஆகியோர் வரதட்சணை (Dowry) கேட்டு சித்ரவதை செய்து வந்துள்ளனர். இதுபற்றி, ரிதன்யா பல முறை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பிறகு, கவின்குமாரை அழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், கவின்குமார் குடும்பத்தினர் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர், தனது காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இளம்பெண் தற்கொலை:
இதனையறிந்த குடும்பத்தினர், அவரை பல இடங்களில் தேடிய நிலையில், மொண்டிபாளையம் அருகே செட்டிபுதூரில் காருக்குள் சடலமாக (Suicide) மீட்கப்பட்டார். அவரது கையில் பூச்சிக் கொல்லி மாத்திரைகள் இருந்துள்ளன. இதுகுறித்து, தகவலறிந்த வந்த காவல்துறையினர் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, தனது தந்தைக்கு வாட்ஸ் ஆப்பில் ஆடியோ செய்திகளை அனுப்பியுள்ளார்.
போலீஸ் விசாரணை:
அந்த ஆடியோவில், 'என்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்துகிறார்கள். தனது கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகிய 3 பேரும் சேர்ந்து என்னை தொடர்ந்து சித்ரவதை செய்கிறார்கள். எனவே, இந்த கொடுமையான வாழ்க்கையை என்னால் இனிமேல் வாழ முடியாது. அதே சமயத்தில், மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்கவும் எனக்கு உடன்பாடு இல்லை. ஒருவனுக்கு ஒருத்திதான்' என அதில் குறிப்பிட்டுள்ளார். வாட்ஸ் ஆப் ஆடியோ மெசேஜ் அடிப்படையில், இளம்பெண்ணின் கணவர் கவின்குமார், மாமியார் சித்ரா தேவி, மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆடியோ மெசேஜ் வைரல்:
என்ன மன்னிச்சிடுங்க அப்பா.. திருமணமான 78 நாளில் இளம்பெண் தற்கொலை.. வைரலாகும் கடைசி நிமிட ஆடியோ#Avinasi pic.twitter.com/sDdhSVnk73
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) June 30, 2025
வீடியோ நன்றி: PuthiyathalaimuraiTV
தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:
டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.