
பிப்ரவரி 13, சென்னை (Chennai News): சனி பெயர்ச்சி 29 மார்ச் 2025 அன்று மீன ராசியில் சனி பூரட்டாதி நான்காம் பாத பிரவேசத்தில் தொடங்கி , 17 மாறுபட்ட நட்சத்திர சாரங்களில் சனி சஞ்சாரம் நிகழ்கிறது சனி பகவான் மீன ராசியில் ஜூன் 3 , 2027 வரை சஞ்சாரம் செய்கிறார். இந்த கால கட்டத்தில் அதாவது 29 மார்ச் 2025 முதல் ஜூன் 3 , 2027 வரை உள்ள காலத்தில் சனி மீனத்தில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கான நட்சத்திர பாதம் சார்ந்த சனி பெயர்ச்சி பலன்கள் பார்க்கலாம்.
துலாம் சனி பெயர்ச்சி பலன்கள் (Thulam Sani Peyarchi Palan 2025):
துலாம் ராசி சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்:
குடும்ப உறவுகளுக்கு இடையே நடுநிலைமை தவறி நடக்க வேண்டிய மிகவும் சோதனையான காலகட்டமாக இருக்கும். ஆனாலும் இந்த சவாலை நீங்கள் நல்லபடியாக எதிர் கொண்டு வெற்றி பெறுவீர்கள் .யாருக்கும் பாதிப்பு வராத அளவில் உங்களால் முடிவு எடுக்க முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கும் உருவாகும். அது உங்களுக்கு உருவாவது மட்டுமல்ல பலருக்கும் அது பயன்படும் அளவுக்கு உங்கள் பெயர் நல்லவிதமாக வெளியே தெரியும். வேலை பார்க்கும் இடத்தில் வியாபாரத்தில் இதே போல தர்ம சங்கடமான நிலைமைகளை சனிபகவான் தோற்றுவிப்பார் .ஆனால் எந்த பாதிப்பும் இல்லாத அளவுக்கு சுமூகமான தீர்வு எட்டப்பட்டுவிடும் என்று நிச்சயமாக நம்பலாம். சிலருக்கு சுமுகமான தீர்வு எட்டப்படுவதில் காலதாமதம் உண்டாகும். ஆனால் அது பகையை வளர்க்காத அளவுக்கு இருக்கும் என்று நிச்சயமாக சொல்லலாம். நீண்ட நாள் தொந்தரவு செய்து கொண்டிருந்த உடல் நிலை இப்போது நல்ல அளவில் முன்னேற்றம் அடைவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனாலும் மருத்துவ செலவுகள் கட்டுக்கு அடங்காமல் இருக்கும் . ஆகவே அதன் மீது தனி கவனம் செலுத்தி பார்த்துக்கொள்ள வேண்டும். Sani Peyarchi Palan 2025: சனிப் பெயர்ச்சி 2025: கன்னி ராசிக்கு ஏழரை சனி எப்படி இருக்கப் போகுது தெரியுமா? விபரம் உள்ளே.!
போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் அதேபோல் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் வீரர்கள் இவர்களுக்கு மிகவும் அனுகூலமான காலகட்டம் என்று சனி பெயர்ச்சி காலத்தில் சனி பூரட்டாதி நான்காம் பாதத்தில் சஞ்சாரம் செய்யும் போது நல்ல காலமாக இருக்கும் என்று நிச்சயம் சொல்லலாம். துலாம் ராசி சித்திரை நட்சத்திர அன்பர்கள் திருமணம் தடை நீங்கி நல்லபடியாக திருமண பாக்கியம் அமையப் பெறுவார்கள் புத்திர பாக்கிய தாமதம் என்ற சோதனையான காலகட்டம் நீங்கி நல்லபடியாக புத்திர பாக்கியம் அமைந்து வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வெளிநாட்டு வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த பலருக்கு தானாக தேடி வந்து அந்த வாய்ப்பு அமையும். இது சனி கொடுக்கும் கருணை. தொழில் தொடங்க வேண்டும் என்று பண உதவி எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு பண உதவி அவசியம் கிடைக்கும். மொத்தத்தில் இந்த சனி பெயர்ச்சி துலாம் ராசி சித்திரை நட்சத்திர அன்பர்களுக்கு லாபமாக இருக்கும். நிலுவையில் இருக்கும் கடன் வசூல் ஆகும் கொடுத்த கடன் தொந்தரவு இல்லாமல் வசூல் ஆகும். கடன் பெறுவதற்கு முயற்சி செய்பவர்களுக்கும் சுலபமாக கடன் கிடைக்கும் அந்த கடனை அடைப்பதற்கும் உரிய வழி உண்டாக்கும். பெரிய அளவில் அதிர்ஷ்டங்கள் சில சித்திரை நட்சத்திர அன்பர்களுக்கு கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது நல்லபடியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
துலாம் ஸ்வாதி ஸ்வாதி நட்சத்திர அன்பர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்:
எங்கிருந்து எப்படி வாய்ப்பு வருகிறது என்று யோசிப்பதற்கு முன்பே பல வாய்ப்புகள் கதவை தட்டி லாபத்தை நோக்கி அழைத்துச் செல்லும். வேலைகள் சரியே முடிப்பதற்கும் உள்ள அனைத்து உதவிகளும் தானாக தேடி வந்து கிடைக்கும் அல்லது தேடிப்போன உதவிகள் தாமதம் இல்லாமலும் தட்டாமலும் கிடைத்துவிடும். பல வருடங்களுக்குப் பிறகு கிடைத்திருக்கும் மிக முக்கியமான முன்னேற்ற காலகட்டம் என்று ஸ்வாதி நட்சத்திர அன்பர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பை நல்ல விதமாக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம். மாணவர்களுக்கு வெற்றி ஆன காலகட்டம். தொட்டது அனைத்தும் வெற்றி என்றே முடியும் என்று சொல்லலாம் .ஓரளவு முயற்சி செய்தாலும் பெருமளவு வெற்றியை கொண்டு வந்து சேர்க்கும் காலகட்டமாக இந்த சனி பெயர்ச்சி காலகட்டம் அமைகிறது. காதலில் வெற்றி ,திருமணத்தில் வெற்றி, திருமண தடை நீக்கம் என்று திருமணம் தொடர்பான அனைத்து நல்ல பலன்களும் இந்த காலகட்டத்தில் ஸ்வாதி நட்சத்திர அன்பர்களுக்கு நடக்க இருக்கிறது.
பிரிந்து இருந்த உறவுகள் சேர்வதற்கு வாய்ப்பு உள்ள காலம். பல நன்மைகள் நடந்தாலும் பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக சிக்கல்களை உருவாக்கும் காலமாகவும் இருப்பதால், வரவு செலவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்து கொள்வது நல்லது புதிய சொத்துக்கள் வாங்கும் போது இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் சொத்து சேரும் வாய்ப்பு இருந்தாலும் அதே சமயத்தில் வழக்கு போன்ற வில்லங்கங்கள் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக சனி பெயர்ச்சி காலம் காட்டுகிறது .ஆகவே ஸ்வாதி நட்சத்திர அன்பர்கள் மிகவும் கவனமாக இருந்து கொள்ள வேண்டும். பங்கு சந்தை போன்ற நிதி சார்ந்த விஷயங்களில் ஸ்வாதி நட்சத்திர அன்பர்கள் இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மிகுந்த நன்மை தரும் காலம் என்று இருந்தாலும் உற்சாக மிகுதியில் தவறு செய்து விடுவதற்கு சனி தூண்டுவார். வாகனம் செலுத்தும் போது மிகுந்த கவனமாக இருப்பது அவசியம். அதிக விபத்துகளை ஸ்வாதி நட்சத்திர அன்பர்கள் சந்திக்க வேண்டி இருக்கும். அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் இந்த காலகட்டத்தில் சரியான முன்னேற்றத்தை அடைவதில் தடை இருக்கும். இது போன்ற சிகிச்சை முறைகளால் விரயம் ஆவதற்கு வழி உண்டு ஆகவே கவனமாக இருக்கவும்.
துலாம் ராசி விசாக நட்சத்திர அன்பர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்கள்:
இந்த சனிப்பெயர்ச்சி துலாம் ராசி விசாகம் நட்சத்திர அன்பர்களுக்கு தொடக்க நிலையில் ராஜயோக பலன்களை வழங்கும் என்றாலும் சனிப்பெயர்ச்சியின் இறுதி கட்டத்தில் அதாவது சனி ரேவதி நட்சத்திர சாரத்தில் சஞ்சாரம் செய்யும் போது தீவிரமான தீய பலன்களையும் வழங்கலாம். மருத்துவ சிகிச்சைகள் நல்ல பலன் அளித்து உடல் நிலை என் நல்ல முன்னேற்றம் உருவாகும். நஷ்டங்கள் குறைந்து லாபம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து நல்ல நிலைக்கு நிதிநிலைமை முன்னேறும் என்று சொல்லலாம். ஆனால் சனி ரேவதி நட்சத்திர சஞ்சாரம் செய்யும் போது துலாம் ராசி சேர்ந்த விசாகம் நட்சத்திரம் நண்பர்களுக்கு கடன் தொல்லைகள் கொஞ்சம் அதிகம் தொந்தரவு செய்யும். மாணவர்கள் அதிகம் சோம்பல் கொள்ளும் காலகட்டமாக இந்த சனி பெயர்ச்சி காலம் துலாம் ராசி விசாக நட்சத்திர மாணவர்களுக்கு இருக்கும். சோம்பலை எதிர்கொள்வது அதிக சவாலாக அமைந்து விடும் .ஆகவே கவனமாக இருக்க வேண்டும் சோம்பலின் காரணமாக போட்டி தேர்வில் வெற்றியை நழுவ விடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன சோம்பல் இல்லாமல் முயற்சி செய்து வெற்றி கொள்ளுங்கள்.
உத்தியோகத்தில் முன்னேற்றம் வியாபாரத்தில் முன்னேற்றம் என்று குறைவான அளவில் எதிர்பார்க்கலாம். ஆனால் குறைவான அளவில் இருந்தாலும் படிப்படியான முன்னேற்றத்திற்கு இந்த சனி பெயர்ச்சி காலகட்டம் துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் நண்பர்களுக்கு பயனாக அமையும். வாய்ப்புகளை நல்லபடியாக பயன்படுத்திக் கொண்டால் பெரிய அளவில் முன்னேற்றத்தை அடையலாம் ஆனாலும் ரேவதி நட்சத்திர சாரத்தில் சனி சஞ்சாரம் செய்யும் போது துலாம் ராசி விசாக அன்பர்கள் புதிய முயற்சியில் ஈடுபடாமல் ஏற்கனவே செய்து கொண்டிருந்த பணிகளை நல்லபடியாக செய்து முடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் நண்பர்கள் உணவு பழக்க வழக்கத்தில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் இருப்பது மிக மிக முக்கியம் .வயிறு சார்ந்த உபாதைகள் ஜீரண மண்டலம் சார்ந்த உபாதைகள் அதிகம் வருவதற்கு இந்த சனி பெயர்ச்சி காலம் வாய்ப்பு அளிக்கிறது. ஆகவே எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். கணவன் மனைவி உறவில் விரிசல்கள் இருந்தால் இந்த காலகட்டத்தில் சரியாகிவிடும் .அதாவது கணவனோ அல்லது மனைவியோ விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் பிறந்திருந்தால் இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு உறவில் இருந்த விரிசல்கள் சரியாகி உறவு மேம்படும் காலமாக அமைந்திருக்கும்.
துலாம் ராசி விசாகம் நட்சத்திர அன்பர்கள் சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் மூலம் பணவரவு உண்டாகும். ஆனால் அதன் பின்னர் அதனால் ஆபத்தும் உண்டாகும் என்பதால் அது போன்ற திடீர் லாபங்களை ஏற்க வேண்டாம். திடீர் லாபம் தரும் எந்த விஷயத்திலும் ஈடுபட வேண்டாம் பங்கு சந்தை உட்பட அதிக லாபம் தரும் முதலீடுகள் என்று வசீகரமான அழைப்புகள் வந்தால் துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் நண்பர்கள் அதனை தவிர்த்து விடலாம். இது போன்ற திடீர. லாபங்கள் சனி பெயர்ச்சி காலத்தில் நல்லது அல்ல அவை பின்னால் பெரிய சிக்கலை உருவாக்கி விடும். விளையாட்டு, கலைகள், கேளிக்கை போன்றவை தொழிலாக கொண்ட துலாம் ராசி விசாகம் நட்சத்திர அன்பர்கள் இந்த சனி பெயர்ச்சி காலம் அவர்களுக்கு மிகவும் லாபகரமான காலம் என்பதை உணர்ந்து வாய்ப்புகளை தேடி போகலாம். தானாக தேடி வரும் வாய்ப்புகள் மட்டும் இல்லாமல் தேடிப்போய் உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்புகளால் அதிக லாபமும் புகழும் அங்கீகாரமும் கௌரவமும் பணமும் கிடைக்கும் என்பதை புரிந்து செயல்பட வேண்டும். இந்த சனி பெயர்ச்சி காலத்தில் துலாம் ராசி விசாக நட்சத்திர அன்பர்கள் மன்னிக்கும் குணத்தை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். சில எதிர்பாராத சிக்கல்களை கடந்து செல்வதற்கு மன்னிக்கும் குணம் இந்த காலகட்டத்தில் மிகவும் பயனுள்ளதாக அமையும்.