
மார்ச் 20, சென்னை (Health Tips): நம்முடைய உடலுக்கு மிக முக்கியமான தாதுக்களில் ஒன்று தண்ணீர் (Water). தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்தவில்லை என்றால் நமது உடலில் நீர்சத்து குறைந்து, பல விதமான நோய்கள் வருவதற்கு முக்கிய காரணமாக அமையும். எனவே, உடலில் எப்போதும் நீர் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, கோடை காலத்தில் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். காலையில் தினமும் தண்ணீர் குடித்தால் கிடைக்கும் பயன்களை (Health Tips in Tamil) இப்பதிவில் காண்போம். Banana Benefits: தினமும் இரவில் ஆண்கள் வாழைப்பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..?
நோய் எதிர்ப்பு சக்தி:
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், நமது உடலில் இருக்கக்கூடிய பல்வேறு பாக்டீரியாக்கள், கிருமிகளை வெளியேற்றுவதற்கு உதவிகரமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தால், குடல் இயக்கம் மேம்படும். அதன்மூலம், உடலில் இருக்கக்கூடிய பல்வேறு விதமான கிருமிகள் வெளியேற்றப்படுவதால, மெட்டபாலிசம் வளர்ச்சதை அதிகரிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.
குடல் ஆரோக்கியம்:
கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரை குடிப்பது நமக்கு ஆரோக்கியம் தான். இதனால் மலம் கழிப்பது எளிதாகும். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் போது வயிற்றிலிருந்து மலம் வேகமாக வெளியேற ஆரம்பிக்கும். கடுமையான மலச்சிக்கல் போன்ற பிரச்சனை எல்லாம் இருக்காது. எனவே, குடல் ஆரோக்கியம் மேம்பட ஆரம்பிக்கும். இதன்மூலம் செரிமானமும் ஆரோக்கியமாக இருக்கும்.
சரும பொலிவு:
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், சருமத்தை பொழிவாக்குகிறது. இதனால், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கக் கூடிய நச்சுக்களை வெளியேற்றுகிறது. அதாவது, ரத்தத்தில் இருக்கக்கூடிய நச்சுக்கிருமிகளும், உடல் உறுப்புகளில் இருக்கக்கூடிய கழிவுகளும் கொழுப்புகளும் வெளியேற்றப்படும். இதனால், சருமம் பொலிவு பெறும். சருமம் பளபளப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.