
பிப்ரவரி 27, சென்னை (Technology News): தனி வீடோ அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடமோ தண்ணீர் தொட்டிகள் இல்லாமல் வீடே முழுமையடையாது. தண்ணீர் தொட்டிகளை, பட்ஜெட் பொருத்தும், தேவையைப் பொருத்தும், பயன்பாட்டைப் பொருத்து தேர்ந்தெடுக்கலாம். உங்கள் வீடுகளுக்கு எந்த தண்ணீர் தொட்டி ஏற்றதாக இருக்கும் என சில ஐடியாக்களை வழங்குகிறோம்.
பிளாஸ்டிக் வாட்டர் டேங்:
அதிகளவு மக்கள் தேர்ந்தெடுப்பது இந்த பிளாஸ்டிக் டேங்குகள் தான். இது பட்ஜெடிற்குள் இருப்பதாலும், தேவைக்கு ஏற்ப அனைத்து அளவுகளில் கிடைப்பதாலும் இதுவே மக்களில் முதல் தேர்வாக இருந்து வருகிறது. மேலும் இந்த வகை டேங்குகள் அப்பார்ட்மெண்ட்களுக்கும், தனித்தனி வீடுகள் உள்ள கட்டங்களுக்கும் இது ஏற்றதாக இருக்கிறது. மேலும் வீடு கட்டும் போது பட்ஜெட்டினால், மாடியைப் பிறகு எடுத்துக் கொள்ளலாம் என நினைப்பவர்களுக்கு இந்த பிளாஸ்டிக் வாட்டர் டேங்குகள் பொருத்தமானதாகும். இந்த பிளாஸ்டிக் வாட்டர் டேங்குகள். 500 லிட்டர் முதல் 1,00,000 லிட்டர் வரை கிடைக்கின்றன. இது பச்சை, நீலம், வெள்ளை, கருப்பு போன்ற நிறங்களில் கிடைக்கிறது. டேங்குகள் புற ஊதா கதிரைத் தடுக்கிறதா என சரிபார்த்து டேங்குகளை வாங்க வேண்டும். Tips For Selling Your Home: வீடு வாங்குவதை விட விற்பதில் சிரமமா? உடனடியாக வீட்டை விற்க என்ன செய்யலாம்..!
சிமெண்ட் தொட்டிகள்:
சொந்த நிலத்தில் வீடு கட்டுபவர்கள் இந்த சிமெண்ட் தொட்டியை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் சிமெண்ட் தொட்டிகள் கட்டும் போது ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துக் கட்டலாம். ஏனெனில் இதில் அதிக செலவு ஏற்படும். ஆனால் இது ஒரு முறை முதலீடாக, வாழ்நாள் முழுவதும் நீடித்து உழைக்கும். பெரிய வீடாக கட்டும் போதும், அதிக ஆட்கள் இருந்தாலும் இந்த தொட்டி அமைப்பது உகந்தது. அதிக தண்ணீர் பயன்படுத்தும் இடங்களிலும் சிமெண்ட் தண்ணீர் தொட்டிகளைக் கட்டலாம். நிலத்தடி நீர் தொட்டிகள் கட்ட நினைப்பவர்கள் சிமெண்ட் தொட்டிகளில் கட்ட வேண்டும். இந்த தொட்டிகள் வீட்டையும் குளுமையாக வைக்கும். இருப்பினும் சிமெண்ட் தொட்டிகளை பக்குவமாக அமைக்க வேண்டும். சிறிய கசிவு கூட கட்டடத்தில் அதிக சேதத்தை விளைவிக்கும். தேவையைப் பொருத்து இதன் அளவை முடிவு செய்யலாம்.
ஒரு கன அடி நீர் என்பது 28 லிட்டருக்கு சமம். 3 பேர் உடைய குடும்பத்திற்கு 500 முதல் 600 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தொட்டி தேவைப்படும். அதற்கு மேல் வேண்டுமெனில் 700 முதல் 1000 லிட்டர் வரையுள்ள டேங்குகளை பொருத்தலாம். 100 லிட்டர் தொட்டியின் விலை சுமார் 1200 லிருந்து கடைகளில் கிடைக்கிறது.