ஜூன் 3, சென்னை (Chennai): பல பேர் தன் சுய சிந்தனை, ஏதேனும் ஆழமான கருத்துக்களையும் டாட்டூக்களாக போட்டுக்கொள்கின்றனர். புது புது விதத்தில் டாட்டுக்கள் போடுவதற்காகவே சிறப்பு டாட்டூ பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மக்களும் நன்கு தேர்ச்சி பெற்ற டாட்டூ நிபுணர்களிடம் பச்சை குத்திக்கொள்ளவதையே விரும்புகின்றனர். அதிக அளவில் பெண்கள் தான் டாட்டூக்கள் போட்டுக்கொள்கின்றனர். பெண்கள் கை மணிக்கட்டு, கால், தோல்பட்டை, விரல், காது, பின் கழுத்து போன்ற பாகங்களில் டாட்டூ போடுவதையே அதிகம் விரும்புகின்றனர். டாட்டூ டிசைன்களை எப்படி தேர்வு செய்யலாம், முன்னெச்சரிக்கை என்ன என்பதைப் பார்க்கலாம்.
பொதுவாக கை மணிக்கட்டு, பின் புறக்கை போன்றவற்றில் டாட்டூக்கள் பெண்களுக்கு அழகாக இருக்கும். இந்த பாகத்தில் டாட்டூ போடும் போது டிசைன்கள் நேர்கோட்டில் இருப்பது போன்று இருந்தால் அழகாக இருக்கும். காதுக்கு பின் புறம் டாட்டூ போட நினைப்பவர்கள் சிறிய அளவில் படங்களாக போட்டால் நன்றாக இருக்கும். ஸ்டிக் அண்ட் போக் (Stick and poke tattoo) டிசைன் டாட்டூஸ் விரல்களுக்கும் கச்சிதமாகப் பொருந்தும். கருமை நிறமுடையவர் கையின் பக்கவாட்டில் போட்டால் மிகத்தெளிவாகவும் அழகாகவும் இருக்கும். தனது பாட்னரின் பெயரை பச்சை குத்த விரும்புவோர் இந்த இடத்தில் போடலாம்.
குறிப்பு: ஒருவரின் பெயரை டாட்டூ போடுவதற்கு முன் எதிக்காலத்தை சற்று சிந்தித்து போடுவது நல்லது.
தனக்கு பிடித்த கதாப்பாத்திரத்தையோ அல்லது தனக்கு விருப்பமான டிசைனையோ பெரிய டாட்டூவாக போட நினைப்பவர்கள் ரியலிஷம் (Realism tattoo) டாட்டூவைப் போடலாம். இது தோல்பட்டை, கை, காலில் வரையலாம். இதில் நிறங்களுடன் போட்டால் கூடுதல் அழகு. Taj Express Train Fire: டெல்லி தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து.. 2 பெட்டிகள் எரிந்து நாசம்..!
உடற்பயிற்சி செய்தோ அல்லது இயற்கையாகவோ கட்டுடல் வைத்திருக்கும் பெண்களுக்கு பிளாக் ஒர்க் டாட்டூ (Blackwork tattoo) ஏற்றதாக்கும். இது போன்ற டிசைன்ஸ் முழுவதும் கருப்பாகவும் கிரே நிறத்திலும் இருக்கும் இதனால் உடல் மேலும் அழகாகத் தெரியும்.
அறிவியல், கணிதம், சம அளவு வரைபடம் போன்றவற்றில் அல்லது எளிதில் பார்பவர்களுக்கு புரியாத படி டாட்டூ போட நினைப்பவர்கள் Geometric tattoo வை போடலாம்.
நண்பர்களுடன் டாட்டூ போட நினைப்பவர்கள்: நண்பர்களுடன் டாட்டூ போட நினைப்பவர்கள் தங்களுக்கென்று ஒரு டிசைனை அனைவரும் கலந்துபேசி முடிவுசெய்து கொள்ளுங்கள். இது ஒரே மாதிரியான டிசைனாகவும் இருக்கலாம். அல்லது வெவ்வேறான டிசைனில் அர்த்தம் ஒரே மாதிரி உள்ள டிசைனாக இருக்கலாம். நட்புக்கான வாசகங்களையும் எழுதலாம்.
டாட்டூ போடுவதில் கவனிக்க வேண்டியவை:
- நீங்கள் போடப்போகும் டாட்டூ மை என்ன என்பதை கவனியுங்கள். அது உங்கள் சருமத்தைப் பாதிக்காததா என்று உடலின் தன்மையை அறிந்து கொள்ளுங்கள்.அதற்கேற்ப வண்ணங்களையும் தேர்வு செய்யுங்கள்.
- டாட்டூ போடும் போது ஊசியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தங்களுக்கு பயன்படுத்தபோகும் ஊசி புதிதா, அல்லது வேறு யாருக்கேனும் பயன்படுத்தியாத, என்று உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.
- டாட்டூ வரைவதற்கான உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே டாட்டூ போட்டுக்கொள்ளுங்கள். டாட்டூ வரைபவர் கையுறை அணிந்திருக்கிறாரா என்று கவனிக்க வேண்டும்.
- டாட்டூ போட்ட பிறகு அதில் அழுத்தம் கொடுக்காத மாதிரியான உடைகளை மட்டுமே அணிய வேண்டும். ஆண்டிபயாடிக் மருந்தை தடவி விட்டு அதை சுற்றி பேண்டேஜ் அணிய வேண்டும். பின் பேபி ஆயிலை புண் ஆறும் வரை தடவி வர வேண்டும்.
- தங்களுக்கு பிடித்த டாட்டூவை அழகாகவும் பாதுகாப்பான முறையிலும் போட்டுக்கொள்ளுங்கள்.