ஜூலை 23, சென்னை (Chennai): தனிவீடுகளாக இருந்தாலும் வீட்டில் தோட்டம் வைப்பது என்பது நகரத்தில் சற்று கடினமான காரியம் தான். அதனால் பெரும்பான்மையானோர் மாடித் தோட்டம், பால்கனியில் செடிகளை வைத்து வளர்க்கின்றனர். அதிலும் போதிய வசதி இல்லாதவர்கள், செடி வளர்க்க நினைத்தால் வீட்டின் சுவரில் செடிகளை வைத்து வளர்க்கலாம். இதை சுவர் தோட்டம் (Indoor Plant Wall) என்பர். குறுகிய அளவுள்ள வீடுகளிலும் கூட இந்த சுவர் தோட்டத்தை நிறுவி பராமரிக்கலாம்.
தொங்கும் தொட்டி செடிகள்: சில வீடுகளில் தொங்கும் தொட்டிகள் அமைத்து அதில் மணி பிளாண்ட் வளர்த்து வருகின்றனர். இது போல் சுவற்றில் சில தொட்டிகளை ஆணியின் தொங்க விடலாம். இது எளிமையாகவும் இருக்கும். இதற்கு அதிக இடம் தேவையில்லை. Tatyana Ozolina Aka MotoTanya Dies: ரஷ்யாவின் மிக பிரபலமான பைக்கர்.. டாட்டியானா ஓசோலினா மறைவு.. ரசிகர்கள் சோகம்..!
கப்போர்ட் தொட்டிகள்: கப்போர்ட்களில் சுற்றில் கப்போர்டை செட் செய்து அதில் செடிகளை வளர்க்கலாம். இது வீட்டை அழகாகவும் ராயல் லுக்கையும் அளிக்கும்.
தொட்டிகளில் தீம்: சுற்றில் வைக்கும் தொட்டிகளில் தீம்களை அமைக்கலாம். ஒரே மாதிரியான நிறத்திலோ அல்லது வடிவத்திலோ அமைக்கலாம். சுவரின் நிறத்திற்கும், வைக்க விருக்கும் செடிகளுக்கும் ஏற்ப அமைக்கலாம்.
சுவற்றில் படரும் கொடிகள்: சுவரில் கொடிகள் படரும் செடிகளை வாங்கி வைக்க்லாம். இது வீட்டை பசுமையானதாக மாற்றூ. இதனால் எப்போதும் வீடு சுத்தமாகவும் இயற்கை தன்மை நிறைந்ததாகவும் இருக்கும்.