ஆகஸ்ட் 21, சென்னை (Festival News): இந்தியாவில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று கிருஷ்ண ஜெயந்தி (Krishna Jayanthi) ஆகும். இது கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி (Krishna Janmashtami 2024), ஸ்ரீ ஜெயந்தி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகை திருமாலின் ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ண அவதாரத்தை போற்றும் விழாவாக கொண்டாடப்படுகின்றது.
பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தையே கிருஷ்ண ஜெயந்தியாக நாம் வருடந்தோறும் கொண்டாடி வருகிறோம். ஆவணி மாத தேய்பிறையின் 8-வது நாளான அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாளில், ரிஷப லக்னத்தில், புதவ்கிழமை நள்ளிரவில் மதுராவில் உள்ள சிறையில் கிருஷ்ணர் அவதரித்ததாக ஸ்ரீமத் பாகவத புராணம் கூறுகின்றது. Krishna Janmashtami 2024: கிருஷ்ண ஜெயந்தி விழா.. வழிபாட்டு முறையும், விரத பலன்களும்..!
இந்த 2024-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி வருகின்ற ஆகஸ்ட் 26-ஆம் தேதி திங்கட்கிழமை வருகிறது. அன்று காலை 09.02 மணிக்கு அஷ்டமி திதியும், இரவு 09.41 மணிக்கு ரோகிணி நட்சத்திரமும் தொடங்குகிறது. அன்று பகல் முழுவதும் கிருத்திகை நட்சத்திரமே உள்ளது. இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தினந்தோறும் கேட்டு மகிழ வேண்டிய பாடல்களின் தொகுப்புகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் பாடலை கேட்டு மகிழுங்கள்..
கண்ணன் பாட்டு தொகுப்புகளை இங்கு கேட்டு மகிழுங்கள்..
முகுந்தனின் முகுந்தா முகுந்தா பாடலை கேட்டு மகிழ இங்கு அழுத்தவும்..
2கே குழந்தைகளின் உள்ளம் கவர்ந்த ராதா - கிருஷ்ணா பாடலை கேட்டு மகிழுங்கள்..
கிருஷ்ண ஜெயந்தி மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் கேட்டு மகிழ வேண்டிய பாடல்கள்..