டிசம்பர் 19, சென்னை (Astrology Tips): தனுசு ராசியில் இருக்கும் மூலம் பூராடம் (Pooradam) நட்சத்திரக்காரர்களே, கடந்த 10 மாத காலமாக, மன தைரியம் இழந்து, குழப்பமான சிந்தனைகளுடன், மன அமைதி இழந்து தவித்துக் கொண்டு இருக்கிறீர்கள். தொழில் ரீதியாக பெரிய முன்னேற்றம் இல்லை. வருமானம் போதிய அளவு இல்லை .எதிலும் தடைகள், குழப்பங்கள் எந்த ஒரு தெளிவான முடிவும் எடுக்க முடியாத சூழ்நிலை. குடும்பத்தில் பிரச்சனை, வீடு ,வண்டி வாகனம் வகையில் வீண் செலவினங்கள், தாய் வழியில் பிரச்சனை, தாயின் உடல் நலம் பாதிப்பு, மருத்துவ செலவினங்கள், தாய் வழியில் கருத்து வேறுபாடு போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருவீர்கள். இதுவரை தொழிலில் மந்தம், தொழில் தடை, தொழிலில் நஷ்டம், புகழ் பெருமை கெடுதல், நண்பர்களிடம் பிரச்சனை, நண்பர்கள் விரோதிகள் ஆவது, இளைய சகோதரர்களிடம் சண்டை, சச்சரவு, புதிய முயற்சிகளுக்கு தடை போன்ற பிரச்சனைகளை சந்தித்து வந்து கொண்டு இருக்கிறீர்கள்.
பூராடம் நட்சத்திரகாரர் பலன்கள்:
தற்போது இன்றைய தேதியில் தொழில் ரீதியான தடைகள் ஓரளவு நீங்கி, ஒரு புதிய முன்னேற்றம் ,ஒரு புதிய வெளிச்சம் உங்களுக்கு தெரிய ஆரம்பித்திருக்கின்றது. தொழில் ரீதியான முன்னேற்றங்கள் இனி படிப்படியாக ஏற்படும். மன குழப்பங்கள் நீங்கி, மன தைரியம், தெளிவான சிந்தனை எல்லாம் வரும் பங்குனி மாதம் முதல் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம் .சுயதொழில் பார்ப்பவர்களுக்கு பெரிய முதலீடு எதுவும் தற்போது செய்ய வேண்டாம். பங்குனி மாதத்திற்கு மேல் நீங்கள் தொட்டது எல்லாம் துலங்கும். தொழில் வியாபாரம் அமோகமான லாபத்தை தரும். புதிய தொழில் ஆரம்பிக்கலாம். வெளிநாடு செல்ல யோகம் இருக்கிறது. திருமண வயதினருக்கு கண்டிப்பாக பங்குனி மாதத்திற்கு மேல் இந்த ஆண்டிற்குள் திருமணம் நடத்தலாம். ஆடை ஆபரணங்கள் புதியதாக வாங்கலாம். Astrology: 2025 ஆம் ஆண்டு மூலம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!
பதவி உயர்வு, தொழில் முன்னேற்றம், புகழ், பெருமை, பாராட்டு மலையில் நனைவது போன்ற நன்மையான பலன்கள் தற்போது இருந்தே மெல்ல மெல்ல பல நன்மையான பலன்கள் நடைபெற்று பங்குனி மாதத்திற்கு மேல் ராஜ நடை போட்டு வருவீர்கள். மாணவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பான ஆண்டாக அமையும். அவர்கள் எதிர்பார்த்த மேல் படிப்புகளில் சேருவார்கள். நல்ல மதிப்பெண் பெறுவார்கள். பெண்கள் புதிய நகை, ஆபரணங்கள் வாங்குவது, வீட்டு வகையில் முன்னேற்றம்,வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவது ,போன்ற மகிழ்ச்சியான ஒரு சூழ்நிலை நிலவும். நீண்ட தூர பிரயாணங்கள், புனித ஸ்தல யாத்திரை, சாதுக்கள் தரிசனம் போன்ற ஆன்மீக ஈடுபாடுகளில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வம்பு, வழக்கு, கேஸ் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். இந்த ஆண்டு பங்குனி மாதத்திற்கு மேல் உங்களின் மன விருப்பங்களை பூர்த்தி செய்யக்கூடிய ஆண்டாக இது அமையும்.
ஏப்ரல் மாதத்திற்கு மேல், மனதில் புதிய உற்சாகம். புதிய தெம்பு பிறக்கும்.பண நெருக்கடி தீரும், திடீர் பணவரவு அதிகரிக்கும். கேட்ட இடத்தில், கேட்ட நேரத்தில் பணம் கிடைக்கும். உங்களுக்கு கடன் தேவைப்பட்டால் கொடுப்பதற்கு நான், நீ என்று முன்வருவார்கள். சொந்த பந்தங்களினால் ஆதரவு உண்டு.தற்போது மாமனார், மாமியாரால் பிரச்சினை, கருத்து வேறுபாடு ஏற்படும். அதே மாமனார் மாமியார் வழியில் ஏப்ரல் முதல் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் ஒப்பந்தங்கள் சித்திரை மாதத்திற்கு மேல் எதிர்பார்க்கலாம். அந்த ஒப்பந்தங்களின் மூலம் மிகப் பிரமாண்டமான வெற்றி கிடைக்கலாம். அதன் மூலம் இந்த ஆண்டு உங்களின் புகழ் பெருமை பரவும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி கிடைப்பது, பதவி உயர்வு, திடீர் வருமானம், புகழ்பெருமை, மக்களிடம் செல்வாக்கு, காரிய சாதனை போன்ற நன்மையான பலன்கள் உங்களுக்கு நடக்கும். மார்ச் வரை எதிலும் கவனத்துடனும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்.
உங்களின் நீண்ட நாள் கனவுகள் இந்த ஆண்டு நிறைவேறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் .புதிய வீடு வாங்குதல் ,வீடு கட்டுவது, இடம் வாங்குவது, நகை வாங்குவது, வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவது, வாடகை வீட்டில் உள்ளவர்கள் தற்போது இருக்கும் வீட்டை விட புதிய நல்ல வீட்டிற்கு மாறுவது போன்ற நன்மையான காரியங்கள் நடைபெறும். உங்கள் மனைவி தொழில் செய்பவராக இருந்தால் தற்போது அவருடைய தொழிலில் சில பிரச்சனைகள் ஏற்படும். உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுப்பவர்களுக்கு இப்போது இருந்தே படிப்படியான உடல் நலன் தேறி, ஏப்ரல் மாதம் முதல் பரிபூரணமாக குணமடைவீர்கள். ஷேர் மார்க்கெட்டில் தற்போது ஒரு ஆறு மாதத்திற்கு ஈடுபட வேண்டாம். அதில் நஷ்டமே மிஞ்சும். ஆறு மாதங்களுக்கு உங்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதற்கு யோகம் இருக்கிறது. கமிஷன் ஏஜென்சி, புரோக்கர்களுக்கும் இதே நிலைதான் ஆறு மாதம் வரை தொழில் வேலை வாய்ப்புகள் சுணக்கமாகவே இருக்கும்.
பரிகாரம்:
துர்க்கை வழிபாடு துன்பத்தை போக்கும் சனீஸ்வர வழிபாடு சகல நன்மைகளையும் தரும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோயிலுக்கு சென்று வாருங்கள். கெடுபலன்கள் பெரிய அளவில் பாதிக்காது. இந்த 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு ஒரு சிறப்பான முன்னேற்றத்தை தரக்கூடிய ஆண்டாக அமையும்.
மார்ச் மாதம் வரை உங்கள் மதிப்பெண் 40. மார்ச்சுக்கு பிறகு 80.
இது கோச்சார ரீதியான பலன் மட்டுமே.