
பிப்ரவரி 05, புதுடெல்லி (Technology News): பங்கு சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் ரிஸ்க் எடுத்து முதலீடு செய்ய தயங்குபவர்கள், ரிஸ்க் இல்லாமல் குறைந்த அளவில் ரிட்டன்ஸ் எதிர்பார்ப்பவர்களுக்கும் சிறந்ததாக இருக்கிறது இந்த ஆர்டி மற்றும் எஃப்டி ஸ்கீம். சமீபத்தில் இந்த ஸ்கீம்களில் இன்வஸ்ட் செய்வோர் அதிகமாகியுள்ளனர். இருப்பினும் இவை இரண்டிலும் எதில் சேமிக்க வேண்டும் என்ற குழப்பம் பலருக்கும் இருந்து வருகிறது.
ஃபிக்ஸட் டெபாசிட் (Fixed Deposit):
சற்று ரிஸ்க் எடுக்க தயாராக இருப்பவர்களுக்கு எஃப்டி கணக்குகள் மிகச் சிறந்தது. இதில் முதலீடு செய்யப்போகும் தொகைக்கான வட்டியை முன்கூடியே தீர்மானித்து, குறிப்பிட்டு மெச்சூரிட்டி தேதி வரை வழக்கமான சேமிப்புக் கணக்கை விட அதிக வட்டி விகிதத்தை வழங்குகின்றன. இந்த திட்டத்தில் ஒரே முறைதான் முதலீடு செய்ய முடியும். மெச்சூரிட்டி காலம் முடிந்ததும் வட்டியுடன் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் வட்டி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு மாறிக்கொண்டே தான் இருக்கும். நீங்கள் முதலீடு செய்கையில் எவ்வளவு இருக்கிறதோ அந்த வட்டியில் தான் ரிட்டன்ஸ் கிடைக்கும். இது குறைந்தபட்சம் 3 மாதங்களிலிருந்து அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை இதில் சேரலாம். இதில் முழு வட்டியையும் பெறாலம். மொத்தமாக குறிப்பிட்ட தொகை இருப்பின் இதை தேர்வு செய்யலாம். IRCTC Cancellation Charges: ரயில் டிக்கெட் கேன்சல் பண்ணுனா எவ்ளோ பணம் கிடைக்கும்? விபரம் உள்ளே.!
ரெக்கரிங் டெபாசிட் (Recurring Deposit):
இது தொடர் வைப்புத் தொகையாக சேமிப்பதாகும். ஆர்டியில் முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்தில் தவணை முறையில் செலுத்துவதாகும். இதில் தாங்கள் விரும்பும் தொகையை கூட சேமித்து வைக்கும் நெகிழ்வுத்தன்மை உள்ளது. இது பொதுவாக 5% முதல் 7% வரை வட்டிகள் இருக்கும். எஃப்டியில் முதலிலேயே பணம் செலுத்துவதால் அதில் லாபம் நிலையானதாக இருக்கும். ஆனால் இதில் தவணை முறையில் செலுத்துவதால், செலுத்தும் காலத்திலிருந்து தான் வட்டி கணக்கெடுத்துக் கொள்ளப்படும். மெச்சூரிட்டி பீரியர்ட் முடிந்ததும் தொகை மற்றும் வட்டிகள் கணக்கிட்டு திருப்பி ரிட்டர்ன்ஸ் கிடைக்கும். இது 6 மாதம் முதல் 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இது எஃப்டியை விட இதில் லாபம் குறைவாக இருந்தாலும் சிறிது சிறிதாக சேமிக்க நினைப்பவர்கள் இதை தேர்வு செய்யலாம்.