World Entrepreneur Day (Photo Credit: Team LatestLY)

ஆகஸ்ட் 21, புதுடெல்லி (New Delhi): உலக தொழில்முனைவோர் தினம் (World Entrepreneur Day) ஆண்டுதோறும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள், புதிய வணிகங்களைத் தொடங்கி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பவர்களான தொழில்முனைவோர்களை கொண்டாடும் நாள். உலகெங்கிலும் உள்ள தொழில்முனைவோரின் கடின உழைப்பு, புதுமை மற்றும் தைரியத்தை அங்கீகரிக்கும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

முக்கிய நோக்கங்கள்: புதிய தொழில்முனைவோர்களை ஊக்குவித்து, அவர்களின் கனவுகளை நனவாக்குவதற்கு உதவுதல், தொழில்முனைவின் முக்கியத்துவம் மற்றும் அதன் சமூக, பொருளாதார தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தொழில்முனைவோர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் நிபுணர்கள் இடையே நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை ஏற்படுத்துதல், புதிய வணிகங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவைகள் இந்த நாளின் முக்கிய நோக்கங்கள் ஆகும். Krishna Janmashtami 2024: கிருஷ்ண ஜெயந்தி விழா.. வழிபாட்டு முறையும், விரத பலன்களும்..!

இந்த நாள், தொழில்முனைவோர்கள் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவர்கள் என்பதை வலியுறுத்துகிறது. தொழில்முனைவோர்கள் புதிய கண்டுபிடிப்புகளை செய்து, சமூக பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டுபிடித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறார்கள். தொழில்முனைவோர் தினம் என்பது, தொழில்முனைவோர்களை கொண்டாடுவதற்கும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிப்பதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.