
பிப்ரவரி 14, சென்னை (Chennai News): பெண்கள் சுயமாக சொந்த தொழில் செய்வது என்பதே அரிது. அதிலும் தொழிலில் முன்னேறி சாதனைபுரிபவர்கள் மிகக் குறைவு. அந்த வரிசையில் டெரகோட்டா நகை செய்து சாதனை படைத்திருக்கிறார் தென்னிந்திய பெண் சாதனையாளர் விருது 2019, இளம் தொழில்முனைவோர் விருது 2020 மற்றும் முனைவர் பட்டம் பெற்ற இளம் தொழில்முனைவோரான கவுசல்யா. இவரின் கைவினை டெரகோட்டா நகைகள் உள்நாட்டில் விட வெளிநாட்டிலேயே அதிக அளவு அனுப்பப்பட்டும் வருகிறது.
கவுசல்யா, சொந்த தொழில் தொடங்குவது குறித்து ஆரம்பத்தில் எந்த ஒரு ஐடியாவும் இல்லை. படிப்பை முடித்ததும் அப்பாவின் ஜவுளித் துறையில் சிறிது காலம் பணியாற்றினேன். அந்த துறை எனக்கு சரியாக அமையவில்லை. கணவரின் பிசினசிலும் ஈடுபாடு ஏற்படவில்லை. சிறு வயதிலிருந்தே ஆர்ட் வொர்கில் ஆர்வமிருந்ததால் சுயமாகவே நகைத் தயாரிப்பையும் கற்றிருந்தேன் என்றார். Biofloc Fish Farming: பயோ ஃப்ளாக் மீன் வளர்ப்பு.. ஓர் ஆண்டுக்கு தொட்டிக்கு ₹50000-க்கு மேல் லாபம்.. விபரம் உள்ளே.!
டெரகோட்டா ஜுவல்லரி:
ஆரம்பத்தில் நகைகளை செய்து விற்பனை செய்து தொழில் தொடங்க வேண்டும் என்றெல்லாம் ஆரம்பிக்கவில்லை. கல்லூரி சென்று கொண்டிருந்த என் தங்கைக்காக டெரகோட்டா நகைகளை செய்து கொடுத்தேன். அவருக்கு ஏற்றார் போல் தினமும் கல்லூரிக்கு அணிந்து செல்லும் வகையில் நகைகள் செய்ய ஆரம்பித்தேன்.எனக்கும் என் தங்கைக்கும் அதிக ஆபரணங்கள் அணிவதில் ஆர்வமில்லை என்றாலும் என் தங்கை தான் அந்த நகைகளை அவளுடைய கல்லூரி தோழிகளிடமும், சமூக ஊடகங்களிலும் மார்கெட்டிங் செய்து விற்று வந்தார். இவ்வாறே ஆரம்பத்தில் என் டெரகோட்டா பயணத்தை தொடங்கினேன் என்றார்.
பின்னர் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு முறையாக கணவரின் வழிகாட்டுதலின் பேரில் புரோஃபெஸ்னலாக ஆஃபீஸ் அமைத்து ஆர்டர்களை எடுத்து விற்பனை செய்ய ஆரம்பித்தேன் என்றார். பெரிய அளவிலான முதல் ஆர்டர் வெளிநாட்டில் இருந்து கிடைத்தபோது, ஏழு மாதம் கர்ப்பமாக இருந்தேன். அந்த நேரத்திலும் தொழிலைக் கைவிடாமல் வாடிக்கையாளுக்கு டெரகோட்டா நகைகளைத் தயாரித்துக் கொடுத்தேன். குழந்தை பிறப்பதற்கு முதல் நாள் வரை நகைத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தேன். எனக்கு வீடில் அனைவரும் ஆதரவு அளித்தனர். என்னிடம் பணிபுரிந்தவர்களின் நிலை அவ்வாறு இல்லை. அவர்களை மறுவிற்பனையாளர்களாக மற்ற முயன்று செயல்படுத்தினேன்.
பலரையும் எனது வாடிக்கை மறுவிற்பனையாளர்களாக வைத்துள்ளேன். என்னால் முடிந்தவரை விலையை குறைத்து விற்பனை செய்கிறேன் அதனாலேயே என்னுடைய வாடிக்கையாளர்கள் என்னிடமே ஆடர்களை எடுக்கின்றனர். மேலும் இது போட்டி மிகுந்த தொழில் என்பதால் ஒரு ஒரு முறையும் புது டிசைகள் உருவாக்கியேஆக வேண்டும். பெரிய ஆர்டர்கள் வருகையில் அதிக நேரம் செலவிட வேண்டி வரும். நகைகள் தயாரிக்க அதிக நேரம் ஆனாலும் லாபகரமாகவும் உள்ளது என மகிழ்ச்சியாக கூறுகிறார் கவுஷி.
பலரும் தனக்கு டெரகோட்டா நகை தயாரிப்பை கற்றுத்தர சொல்லி கேட்கிறார்கள். நானும் என்னால் முடிந்த அளவிற்கு சொல்லி தர முயன்றேன். ஆனால் அவர்களுக்கு மார்கெட்டிங்கில் பிரச்சனை ஏற்பட்டதால் அதை கற்றுக் கொடுத்ததற்கான திருப்தி இல்லததால் அதை கைவிட்டு விட்டேன் என்றார். அதனால் தான் அவர்களை மறுவிற்பனையாளர்களாக மாற ஆலோசனை வழங்குகிறேன். இதில் அவர்கள் நிலையான வருமானம் ஈட்டலாம். பெண்கள் சுயமாக சம்பாதித்தாலே அவர்களின் மரியாதை கூடும் என்று கூறினார்.
டெரகோட்டா என்பது களிமண்ணில் நகைகளை வடிவமைத்து, அதை உலரவிட்டு நெருப்பில் சுட்டு எடுக்க வேண்டும். அதின் பின் நகைகளில் தேவையான வண்ணம், டெகரெட் செய்து கொள்ளலாம். ஒரு நகை தயராக 5 முதல் 7 நாட்கள் ஆகும்.