ஜூன் 13, புதுடெல்லி (New Delhi): அல்பினிசம் என்பது வெள்ளை சருமம் உடையவர்களை குறிக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சருமம் வெள்ளை வெளிரென காணப்படும். இது வெண்தோல் குறைபாடு ஓர் அரிதான மரபணு குறைபாட்டு நோய் ஆகும். அதேநேரம் இது தொற்று நோய் அல்ல. தோலின் நிறத்தை நிர்ணயிக்கக்கூடிய மெலனின் எனும் நிறமியானது தோல், கண்கள் மற்றும் முடியில் இல்லாததால் இந்நோய் உண்டாகிறது. இதனை பலர் தொற்றுநோய் என எண்ணி வருகின்றனர். எனவே, மக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் அல்பினிசத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பேசும் விழிப்புணர்வு தினமாக, ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம் (International Albinism Awareness Day) ஜூன் 13 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
அறிகுறிகள்: வெள்ளை நிற முடி மற்றும் வெளிர் நிறத்தோல், புருவங்கள் மற்றும் கண்களில் உள்ள முடிகள் வெளிர் நிறத்தில் காணப்படுதல், கண்களானது நீலநிறம் அல்லது ப்ரவுன் நிறத்தில் காணப்படுதல், கருவிழிகள் ஒளி ஊடுருவக்கூடிய வகையில் சிவப்பு மற்றும் லேசான நிறத்தில் காணப்படுதல், தலைமுடியானது வெளிர் அல்லது பழுப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் காணப்படுதல், பார்வை குறைபாடு ஏற்படுதல், கண்களை நகர்த்த முடியாமல் போதல் போன்றவைகள் ஆகும். Glowing Blue UFO: நியூயார்க் நகரின் லாகார்டியா விமான நிலையத்தின் மேல் பறந்து கொண்டிருந்த மர்மப்பொருள்.. ஏலியன்கள் பூமிக்கு வருகிறதா?.!
சிகிச்சை முறைகள்: அல்பினிசத்திற்கு எந்த சிகிச்சையும் இல்லை என்றாலும், இந்த நிலையில் உள்ள நபர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். இவர்கள் வருடாந்திர கண் பரிசோதனை செய்வது அவசியம். சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க சில சரும பராமரிப்பு விஷயங்களை செய்து வரலாம். மேலும் அல்பினிசம் உள்ளவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் தான். எனவே அவர்களின் தோற்றம் கண்டு அவர்களை ஒதுக்காமல் அவர்களையும் அரவணைத்து செல்வது சமூக மூன்னேற்றத்திற்கு உதவும்.