UFO (Photo Credit: @TheInsiderPaper)

ஜூன் 12, நியூயார்க் (Technology News): வானத்தில் பறவை, பட்டம், விமானம், ராக்கெட் பறப்பதை பார்த்துள்ளோம். அதுபோக அவ்வப்போது விண்கற்கள், எரிகற்கள் எல்லாம் பறப்பதை பார்த்திருக்கிறோம். இப்படி நாம் இன்னதென்று அடையாளம் காண முடியாமல் விடும் பொருட்களைத் தான் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் (Unidentified Flying Object) என்று குறிப்பிடுகின்றனர். அதை சுருக்கமாக யுஎஃப்ஓ (UFO) என்பர். பெரும்பாலும் வேற்று கிரகங்களில் இருந்து வந்த பறக்கும் தட்டுகளைக் குறிக்கவே இந்த வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர்.

நியூயார்க் நகரத்தில் நாகார்டியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகள் பறந்து கொண்டிருந்தபோது அதிலிருந்து ஒரு பெண் மட்டும் தான் யுஎஃப்ஓ_வை பார்த்ததாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் அதனை வீடியோவை எடுத்துள்ளார். அது ஒரு நீல நிறப் பொருள் அதி வேகத்தில் விமானத்தை விட மிக வேகமாக நகர்வதை நான் காண முடியும். Post Office Monthly Income Scheme: அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்.. இணைவது எப்படி?.!

இதனைத் தொடர்ந்து மற்றொரு பயணியும் தானும் அதனை கண்டதாக கூறியுள்ளார். ஆனால் இது உண்மையில் யுஎஃப்ஓ? அல்லது ட்ரோனா? என்று ஆய்வு செய்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இதனை பலர் போலி என்று கூறி வருகின்றனர். அதே நேரம் அமெரிக்க கடற்படையின் முன்னாள் உறுப்பினரான ரைஸ் இதனை ட்ரோனாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.