டிசம்பர் 09, டெல்லி (Special Day): உலகம் முழுவதும் பாரபட்சம் இன்றி பரவி இருக்கும் ஊழலை ஒழிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9-ம் தேதி சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (international Anti-Corruption Day) அனுசரிக்கப்படுகிறது. ஒரு நாட்டின் நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கிய முன்னேற்றத்தை தடுப்பதில் ஊழலின் பங்கு மிக அதிகம்.
வரலாறு: கடந்த 2003-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச ஊழலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை தனது முதல் மற்றும் முக்கிய படியை எடுத்து வைத்தது. ஐக்கிய நாடுகளின் பொது சபை (UNGA) 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தை ஏற்று கொண்டது. இந்த தீர்மானம் ஏற்று கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டதிலிருந்து, ஆண்டுதோறும் டிசம்பர் 9 அன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. Astrology: 2025 ஆம் ஆண்டு மகம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!
விழிப்புணர்வு கவிதைகள்:
ஊழலென்ப தென்னவென்று உலகில் உள்ளோர்
ஊடகங்கள் பறைசாற்ற அறிந்தோம் இன்று
முழக்கமிட்டு முடிந்தவரை உரைத்தல் நன்று
முழுமதியாய் இருக்கின்ற பொருளாதாரம்
வீழ்த்துகின்ற ஒருசெயலே ஊழல் என்போம்
வீழ்ச்சிதாக்கி நிலைகுலையும் இந்த நாட்டில்
தாழ்சியின்றி வாழுதற்கே நம்மில் பல்லோர்
தரம்கெட்டு செய்கின்ற செயலே ஊழல்
தொழில் செய்து ஏற்றமுற்றால் நட்டமென்றே
தொகுத்த போலிச் செலவு காட்டி தொகையும் சேர்ப்பார்
பழியென்று உணராது பேரம் பேசி
பதவியிலே இருப்பவரும் திட்டமிட்டே
செழிப்புறவே தனக்குமொரு தொகை கேட்பார்
செய்பணிக்கு இலாபத்தில் பங்கு என்பார்
அழிவுகளில் கொடுக்கின்ற நஷ்ட ஈட்டில்
அளப்பறிய பொருள்சேர்ப்பார் தனது வீட்டில்
விதிமீறி செயல்பட்டு உறவு வாழ
விதைத்திடுவார் அரியதொரு திட்டம் ஒன்றே
கதியற்றோர் வழ்வுதன்னில் கலக்கம் ஏற்றி
கணக்கின்றி நஷ்டத்தை விளைத்திடுவார்
எதில்தான் ஊழல்லென்று எவரறிவார்
எரிபொருளாம் நிலக்கரியில் சுரங்க ஊழல்
அதிவேக அலைக்கற்றை ஒதுக்கல் ஊழல்
அகிலத்தில் ஊழலில்லாத் துறைகள் இல்லை
புதிதாக வகுக்கின்ற கொள்கை எல்லாம்
புகுத்திடுவார் மாண்புமிக்கோர் ஊழல்! ஊழல்!!
மதியுடையோர் எல்லோரும் ஒன்று கூட்டி
மறைவின்றி மக்களுக்காய் திட்டம் செய்க !
எல்லோரும் வெளிப்படையாய் இருந்தால் போதும்
எவர்செய்வார் ஒதுக்கப் பதுக்கல் நாட்டில்!
பாதிப்பெண்ணி நேர்மையுடன் நாமே நடந்தால்
பாரதத்தில் முழுமையாய் ஒழியும் ஊழல் ! - (கவிதைக்கு நன்றி, ராஜ்கவி சி. அருள் ஜோசப் ரா)