ஆகஸ்ட் 26, சென்னை (Festival News): சர்வதேச நாய் தினம் (International Dog Day) ஆண்டுதோறும் ஆகஸ்ட் 26-ம் தேதி (இன்று) கொண்டாடப்பட்டு வருகிறது. நாய்கள் நமக்குக் கொடுக்கும் அன்பையும், பாதுகாப்பையும், மகிழ்ச்சியையும் நினைவுபடுத்தி, நம்முடைய நான்கு கால் நண்பர்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கம்.
நாய்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்: நாய்களால் மனிதர்களை விட அதிக நிறங்களை வேறுபடுத்தி அறிய முடியும். இது அவர்களுக்கு வேட்டையாடுவதற்கு உதவுகிறது. நாய்கள் மனிதர்களின் முகபாவனைகளை புரிந்துகொள்ளும். இது அவர்களுக்கு மனிதர்களுடன் தொடர்பு கொள்ள உதவுகிறது. இவைகள் மிகவும் நுட்பமான காதுகளைக் கொண்டுள்ளன. இது அவர்களுக்கு மிகச்சிறிய ஒலிகளையும் கேட்க உதவுகிறது. Krishna Jayanthi 2024: "எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ., அப்போதெல்லாம் நான் வருவேன்" - இன்று கிருஷ்ண ஜெயந்தி.. வாழ்த்துக்கள் ஆன்மீக சொந்தங்களே.!
நாய்களால் மிகவும் விரைவாக ஓட முடியும். சில இனங்கள் மணிக்கு 45 மைல் வரை ஓட முடியும். நாய்கள் மனிதர்களால் வளர்க்கப்பட்ட மிகவும் பழைய விலங்குகள். அவை மனிதர்களுடன் சுமார் 15,000 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன. மேலும் நாய்கள் மிகவும் புத்திசாலிகள். அவைகளால் பல தந்திரங்களை கற்றுக்கொள்ள முடியும். அதுமட்டுமின்றி நாய்கள் மிகவும் பக்தியான விலங்குகள். அவை தங்கள் குடும்பத்திற்கு மிகவும் விசுவாசமாக இருக்கும்.
நாய்கள் பற்றிய கவிதைகள்:
- ஆசையாய் கொஞ்சி
அன்பாய் வளர்த்த
என் எஜமானன்களுக்கெல்லாம்
நான் செல்ல பிள்ளை
- உப்பிட்டவரை உள்ளவரை நினைக்கிறேன்
தப்பு செய்தவரை துரத்தியும் கடிக்கிறேன்
வன்முறையில் நாட்டமில்லை
வாலாட்டும் மறந்ததில்லை
- ஒருவேளை சோத்துக்கு
உண்மையாய் உழைக்கிறேன்
நான் பட்ட கடனுக்கு
காவலும் காக்கிறேன்
- மிருக ஜாதியென்று
ஒதுக்கும் மனிதனே
உன்னை விட நம்பிக்கையில்
நான் ஒரு படி மேல்
- மிச்சத்தை உண்டு வாழ்ந்தும்
என் நிம்மதிக்கு பஞ்சமில்லை
நீதி நேர்மை படித்ததில்லை
நீதியோடு வாழ்ந்திட மறந்ததில்லை
- கலகம் எனக்கு தெரியாது
துரோகம் எனக்கு பழக்கமில்லை
ஏமாற்றுதல் எந்தன் வழக்கமில்லை
விசுவாசமே என் விருப்பம் Krishna Janmashtami 2024: கிருஷ்ண ஜெயந்தி 2024; தேதி, நகர வாரியான நேரம் மற்றும் பூஜை முறைகள்..!
- காலத்திற்கு ஏற்ப
பேச்சை மாற்றும் மனிதா -
நான் குறைக்கும் நாய்தான்
என்றும் என் எஜமானங்களுக்கு மட்டும்
- கடமைக்காக கண்ணீர்விடும்
கலியுக நாடகதாரிகளே
எங்களின் அழுகைக்கு ஈடேதும் இல்லை
என் எஜமான்களை மறந்ததில்லை
- இறந்துவிட்ட எஜமானுக்கு
இரங்கல் செய்த நாளுண்டு
பாடையில் போன அவர்க்கு
நான் பட்டினியாய் கிடந்த நாளுண்டு
- நடிக்க தெரியாத நாய்கள் நாங்கள்
நன்றியுள்ள ஜீவன்கள் நாங்கள்
வளர்த்தவருக்கு வாலாட்டி
வாழ்வை கழிக்கும் ஜீவன்கள் நாங்கள்
- மிருகமென்ற கேவலம் வேண்டாம்
மிஞ்சிவிட்டேன் உன்னை விசுவாசத்தில்
ஐந்தறிவு ஜீவன் நான்
ஆறறிவு உன்னை வென்று விட்டேன்..! - கவிதைக்கு நன்றி, வினாயகமுருகன்