செப்டம்பர் 16, சென்னை (Festival News): இஸ்லாமிய இறை தூதரான முகமது நபிகள் நாயகத்தின் (Mohammad Nabigal Nayagam) வாழ்க்கையை நினைவுப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மிலாடி நபி (Miladi Nabi) கொண்டாடப்படுகின்றது. முகமது நபி, கி.பி. 570-ஆம் ஆண்டு ரபி உல் அவல் மாதத்தில், இஸ்லாமிய நாட்காட்டியின் 3-வது மாதத்தின் 12-ஆம் நாளில் மக்கா (Makkah) நகரில் அவதரித்தார். இந்த நாளையே மிலாடி நபியாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆரம்பத்தில் இந்த பண்டிகை எகிப்தில் அதிகாரப்பூர்வ விழாவாக கொண்டாடப்பட்டு, பிறகு உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகையாக மாறியது. இந்த 2024-ஆம் ஆண்டு மிலாடி நபி திருநாள், செப்டம்பர் 16-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதாக நாட்காட்டிகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், பிறை தெரியாததன் காரணமாக தற்போது செப்டம்பர் 17-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமை காஜி தெரிவித்துள்ளார். World Ozone Day 2024: ஓசோன் அழிந்தால் என்ன நடக்கும்? இன்று உலக ஓசோன் தினம்.!
வாழ்த்துக் கவிதைகள்:
- இந்த மிலாது நபி நன்நாளில், அல்லா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியான ஆசிர்வாதமான வாழ்க்கையை நல்குவார் என வாழ்த்துகிறோம்.
- ஈகரை இஸ்லாமிய உறவுகளுக்கு மிலாடி நபி வாழ்த்துகள் !
- முகமது நபி சொல்லியிருக்கிறார்.. என் நாமத்தினால் யார் வாழ்த்துகளை அனுப்புகிறார்களோ அவர்கள் வாழ்த்தப்படுவார்கள்.
- அண்ணலெம் நபியின் பிறந்த நாள் இன்று மீலாது.. அவரின்றி மனிதனின் வாழ்க்கை எதிலும் மீலாது.. அவர் புகழ் பாடினால் இன்பம் என்றும் மாளாது !
- புண்ணிய நபியின் பிறந்த நாள் இன்று மீலாது.. புவியினில் அவரின்றி உயிரினம் எதுவும் வாழாது.. மறுமையின் நிழலும் சுகமும் எவர்க்கும் மீளாது !
- மறுவிலா துயர்ந்து நிறைவினைப் பெற்றிவ் வுலகம் புரந்திட.. குறையற வாழும் குணத்தின் குன்றாய் இணையற, அவரைப் படைத்தான்.. இந்த அழகான நாளில், அல்லா தேசத்தில் அமைதியை நிலைநாட்டுவாராக.
- இந்த புனித நாள் நம் மனங்களை ஞானத்தில் திளைக்கச் செய்து, மனங்களில் அமைதியை நிலை நாட்டட்டும்.