நவம்பர் 07, சென்னை (Special Day): உலகின் வருங்கால எதிர்காலமான பச்சிளம் குழந்தைகளை பாதுகாத்து, ஊக்குவித்து, வளர்ப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் நவம்பர் 7-ம் தேதி “குழந்தைகள் பாதுகாப்பு தினம்” (Infant Protection Day) கடைப்பிடிக்கப்படுகிறது.
குழந்தை பிறந்த முதல் 28 நாட்கள் முக்கியமான காலக் கட்டமாகும். குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சி, அதிகமான இறப்பு இரண்டுக்கும் சாத்தியம் உள்ள காலம். ஒவ்வொரு நாளும் உலகளவில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இறப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய அளவில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 33 குழந்தைகளும், தமிழகத்தில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 16 குழந்தைகளும் ஓராண்டுக்குள் இறக்கின்றன. பெரும்பாலான குழந்தைகளின் இறப்பு முதல் வாரத்தில் நிகழ்கிறது. Nov 6 Special Day: போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழல் சுரண்டலைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் இன்று..!
குழந்தை பாதுகாப்பு:
- ஆரம்பத்தில் 1 மணி முதல் 2 மணி நேர இடைவெளியிலும், பின்னர் 2 மணி முதல் 3 மணி நேர இடைவெளியிலும் குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
- தொப்புள் கொடி விழுவதற்கு முன் குழந்தையை தண்ணீரில் மூழ்கி எடுக்க கூடாது.
- தாயின் உடலோடு குழந்தை அரவணைப்பில் இருக்க வேண்டும்.
- குழந்தையை பராமரிக்கும் போது கண்டிப்பாக சரியான முறையில் கைகளை கழுவ வேண்டும்.
- குழந்தைக்கு முறையாக தடுப்பூசிகளை போட வேண்டும்.
- குழந்தைக்கு தளர்ச்சியான, பருத்தி உடையை அணிவிக்க வேண்டும். குளிர்காலங்களில் உல்லன், சணல் துணி ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும்.