அக்டோபர் 09, சென்னை (Festival News): நவராத்திரி பண்டிகையானது நாடு முழுவதும் 9 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. அதன்படி முதல் மூன்று நாட்கள் துர்கா தேவிக்கும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவிக்கும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது. எனவே நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சரஸ்வதி பூஜை அன்று கல்வியினை ஆதாரமாக திகழும் பொருட்களை வைத்து கொண்டாடுகிறோம்.
நல்ல நேரம்: சரஸ்வதி பூஜை (Saraswati Puja) அக்டோபர் 11ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களுமே ஞானத்தை வழங்குகின்ற கலைமகளாகிய சரஸ்வதிக்குரிய வழழிபாட்டு நாட்களாக இருந்தாலும், நவராத்திரியின் ஒன்பதாவது நாளை சரஸ்வதி பூஜையாக கொண்டாடுகிறோம். பூஜை செய்ய பகல் 12.15 முதல் 1.15 மணி வரை நல்ல நேரமாக பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சரஸ்வதி பூஜை செய்ய மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை நல்ல நேரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வழிபாட்டு முறை: அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, பூஜையறையைக் சுத்தம் செய்து கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். உரிய சுபவேளையில் சரஸ்வதி தேவியை புத்தகம், படம், விக்ரகம் அல்லது கலசத்தில் அலங்கரிக்கலாம். பிள்ளைகளின் பாடப்புத்தகங்களை அடுக்கி சரஸ்வதி படம் அல்லது சிலைக்கு மாலை மலர்களால் அலங்காரம் செய்து சந்தனக் குங்குமத் திலகம் இட்டு அலங்கரித்து, சரஸ்வதியை வழிபட வேண்டும். சிறப்பு பூஜையுடன் சரஸ்வதி தேவிக்கு பிரியமான சர்க்கரை பொங்கல், புளியோதரை, சுண்டல், பொறி, பழங்கள் ஆகியவற்றை படைக்கலாம். வாழைப்பழம், பூ, ஊதுபத்தி, சாம்பிராணி வைத்து விளக்கேற்றி தீபாராதனை காட்டி வழிபடலாம். World Post Day 2024: உலக அஞ்சல் தினம்.. வாங்க இன்றைக்கு உலகின் வினோத தபால் நிலையங்கள் காணலாம்..!
நவராத்திரியில் சரஸ்வதி மந்திரம்:
ஓம் வரப்பிரதா போற்றி
ஓம் மேதா தேவி போற்றி
ஓம் மஹாவித்யாயை போற்றி
ஓம் பிரம்மஞானைகசாதனா போற்றி
ஓம் மஹாபலா போற்றி
ஓம் மகேஸ்வரியே போற்றி
ஓம் ஞானமுத்ரா போற்றி
ஓம் மாலினி போற்றி
ஓம் மஹாவித்யா போற்றி
ஓம் விமலா போற்றி
ஓம் சந்திரிகா போற்றி
சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்:
1]கலையின் தெய்வம் சரஸ்வதியின் ஒளி உங்களின் அறிவுக்கும் அருளுக்கும் வழிகாட்டட்டும். அனைவருக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.
2]சரஸ்வதி தாயின் ஆசீர்வாதத்தால் அறிவும் படைப்பாற்றலும் உங்கள் வாழ்க்கையில் செழிக்கட்டும். சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.
3]அறிவுக் கடவுளின் அருளால் கற்றலின் சக்தி உங்களை ஆட்கொள்ளட்டும். அனைவருக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.
4]சரஸ்வதியின் ஒளியில் உங்கள் எண்ணங்கள் ஒரு பூகம்போல் புதியதாக மலரட்டும். அனைவருக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.
5]சரஸ்வதி பூஜையை கொண்டாடும் இந்நாளில், முடிவற்ற ஆர்வமும் நிலைத்த அறிவும் உங்களை அருள்புரியட்டும். சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.