அக்டோபர் 09, சென்னை (Special Day): இன்டர்நெட், இமெயில், ஃபேக்ஸ், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என்று பலவகையான நவீன தொழில்நுட்பங்கள் மூலம் உலகம் முழுவதும் நேரடியாகவே அனைத்துச் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும், ஆடியோக்களும் பரிமாறப்படுகின்றன. ஆனால், பழங்காலத்தில் இத்தகைய வசதி எதுவும் இல்லை. முதலில் செய்திகளைப் பரிமாற ஓலை பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு, காகிதத்தின் வரவால் தபால் உபயோகப்படுத்தப்பட்டது. எனவே தகவல்தொடர்புகளை வளர்ப்பதில் அஞ்சல் சேவைகளின் முக்கிய பங்கை கௌரவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட நாளாக உலக அஞ்சல் தினம் (World Post Day) அக்டோபர் 9ம் தேதி கொண்டாடப்படுகிறது.
வரலாறு: உலக தபால் அமைப்பானது, 1874-ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் இந்தியாவும் அங்கத்தினராக உள்ளது. உலக தபால் அமைப்பை நினைவுபடுத்தும் விதமாக 1969 அக்டோபர் 9-ம் தேதி உலக தபால் தினம் அறிவிக்கப்பட்டது. இந்தத் துறையின் சேவைகளைப் பாராட்டும் விதமாகவும், இதன் திட்டங்கள் பற்றி மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது. நம் நாட்டில் 1764-ம் ஆண்டு தபால் துறை தொடங்கப்பட்டது. சுதந்திரம் பெற்ற காலத்தில் 23 ஆயிரம் தபால் நிலையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது இந்தியாவில், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தபால் நிலையங்கள் உள்ளன. Astrology Prediction: உங்கள் ராசி, லக்னத்தின் குரு பொதுப் பலன்கள் எப்படி? 12 ராசிக்காரர்களில் யார் அந்த இலட்சாதிபதி?..
வினோத தபால் நிலையங்கள்:
- JW வெஸ்ட்காட் II, என்பது அமெரிக்காவில் உள்ளது . பெரிய ஏரிகளின் அஞ்சல் படகு என்று அழைக்கப்படும் இந்த படகு அஞ்சலகம் டெட்ராய்ட் ஆற்றின் வழியாக செல்லும் கப்பல்களுக்கு அஞ்சல் அனுப்புகிறது, இது உலகின் சிறந்த மிதக்கும் தபால் அலுவலகம் ஆகும்.
- ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள லாஹவுல்-ஸ்பிதி மாவட்டத்தில் ஹிக்கிம் அஞ்சல் அலுவலகம் அமைந்துள்ளது. ஹிக்கிம் தபால் நிலையம் கடல் மட்டத்திலிருந்து 14,567 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த தபால் அலுவலகம் தான் உலகின் மிக உயரமான தபால் நிலையமாகும்.
- தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள வனுவாட்டு அஞ்சல் அலுவலகம் நீருக்கடியில் அமைந்துள்ள ஒரே தபால் நிலையம் ஆகும். இங்கு பார்வையாளர்கள் ஸ்நோர்கெலிங் அல்லது ஸ்கூபா டைவிங் செய்து தான் வாட்டர் ப்ரூப் அஞ்சல் அட்டைகளை அனுப்ப முடியும்.
- பின்லாந்தில் உள்ள சுவோமென்லின்னா தபால் அலுவலகம், இந்த தபால் அலுவலகத்தில் கடிகாரம் இல்லை. சூரியன் தான் அதன் திறக்கும் நேரத்தை தீர்மானிக்கிறதாம்.
- அண்டார்டிகாவில் உள்ள பென்குயின் தபால் நிலையம், ஆயிரக்கணக்கான அடேலி பெங்குவின்களால் சூழப்பட்ட இங்கு, பார்வையாளர்கள் தனித்துவமான போஸ்ட்மார்க்குகளுடன் அஞ்சல் அட்டைகளை அனுப்பும் தனித்துவமான வாய்ப்பைப் பெறுவார்கள்.
- ஸ்காட்லாந்தில் உள்ள சங்குஹர் தபால் நிலையம், உலகில் தொடர்ச்சியாக இயங்கி வரும் மிகப் பழமையான அஞ்சல் அலுவலகம் என்று நம்பப்படுகிறது. 1712 முதல் இயங்கி வருகிறதாம்.