Elephant Day (Photo Credit: Team LatestLY)

ஆகஸ்ட் 12, புதுடெல்லி (New Delhi): இபம், இரதி, குஞ்சரம், இராசகுஞ்சரம், இருள், தும்பு, வல் விலங்கு, கரி, அஞ்சனம், நாகம், கதநாகம் என்றெல்லாம் தமிழில் அழைக்கப்படும் யானைகளின் வாழ்விடத்தைப் பாதுகாக்க ஆண்டு தோறும் கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் சர்வதேச யானைகள் தினம் (World Elephant Day) கடைபிடிக்கப்படுகிறது. மேலும் வில்லியம் சாட்னர் என்பவர் 'வனத்திற்குள் திரும்பு' என்ற ஆங்கிலப் படம் ஒன்றை எடுத்தார். இந்தப் படம் 2012 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 12 ஆம் நாளில் வெளியானதையடுத்து, உலக யானை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

யானை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்: யானைகள் தினமும் 150 கிலோகிராம் வரை உணவு உண்ணும். யானைகள் தண்ணீர் இல்லாமல் 3 நாட்கள் வரை வாழ முடியும். மேலும் யானைகளின் மூக்கு மிகவும் வலிமையானது. அது ஒரு டன் எடையை தூக்க முடியும். இவை யானைகள் தங்களது குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும். அதுமட்டுமின்றி யானைகள் மிகவும் புத்திசாலிகள். அவை பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. யானைகளில், ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், ஆசிய யானைகள் என்று மூன்று சிற்றினங்கள் மட்டுமே இன்று எஞ்சியுள்ளன. International Youth Day 2024: "நம் முன்னோர்கள் போராட்டத்தின் வாரிசுகள்" இன்று சர்வதேச இளைஞர் தினம்..!

உலக வனவிலங்கு நிதி அமைப்பின் கூற்றுப்படி, உலகில் சுமார் 415,000 ஆப்பிரிக்க யானைகள் உள்ளன. சுமார் 40,000 முதல் 50,000 ஆசிய யானைகள் உள்ளன. ஆசிய யானைகளின் 60 சதவீதம் வாழ்விடமாக இந்தியா உள்ளது. மேலும் கடந்த 8 ஆண்டுகளாக யானைகளின் இனம் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக தெரியவந்ததுள்ளது. யானைகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், யானைகள் வனத்தில் இருந்து விவசாய நிலங்களுக்குள் புகுந்து வருகிறது. இதனால், மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே எதிர்பாராத மோதல் ஏற்படுகிறது. விளைநிலங்களில் அமைக்கப்படும் மின்வேலிகளில் சிக்கி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் மற்றும் ரயில் மோதி பலியாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எனவே இந்த யானைகள் தினத்தில் மனிதர்களின் நலனுக்கும், யானைகளின் நலன்களுக்குமிடையே உள்ள முரண்பாடுகளை முறியடிக்க முற்படுவோம்.