World Mosquito Day (Photo Credit: LatestLY)

ஆகஸ்ட் 20, புதுடெல்லி (New Delhi): உலகக் கொசு தினம் (World Mosquito Day) ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள், மலேரியா நோயைப் பரப்புவதில் கொசுக்களின் பங்கு குறித்து 1897-ல் கண்டுபிடித்த டாக்டர் ரொனால்டு ராஸை (Sir Ronald Ross) நினைவு கூரும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.

கொசுக்கள் ஏன் நம்மை கடிக்கின்றன?: கொசுக்களின் வாழ்க்கை சுழற்சி, முட்டை, புழு, கூட்டுப்புழு, கொசு என நான்கு நிலைகளை கொண்டது. இதில் பெண் கொசுக்கள் தான் முட்டையிட தேவையான புரதத்திற்காக நம் ரத்தத்தை உறிஞ்சுகின்றன. நாம் சுவாசிக்கும் கார்பன் டை ஆக்சைடு கொசுக்களை நம்மை நோக்கி ஈர்க்கிறது. நம் உடல் வெப்பம் கொசுக்களை கவர்ந்திழுக்கும். அதனாலேயே நம்மை குறிவைத்து கடிக்கின்றன. கடிப்பதற்காக மனிதர்களையும், விலங்குகளையும் தேடி 75 மைல் தொலைவுகள் வரை பயணிக்கக் கூடியவை. World Photography Day 2024: உலக புகைப்பட தினம்.. வரலாறு என்ன தெரியுமா?!

கொசுக்கள் பரப்பும் நோய்கள்: உலக மக்கள் தொகையில் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள், கடுமையான நோய் பரப்பும் கொசுக்கள் இருக்கும் பகுதிகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். கொசுக்கள் மலேரியா, டெங்கு, சிக்குன்குன்யா போன்ற ஆபத்தான நோய்களைப் பரப்புகின்றன. கொசுக்களின் தொல்லை நம் உறக்கத்தைப் பாதித்து, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை குறைக்கிறது.

கொசுக்களை எப்படித் தடுப்பது?: கொசுக்கள் தேங்கிய நீரில் முட்டையிடும். எனவே, வீட்டைச் சுற்றி தேங்கிய நீரை அகற்றுவது முக்கியம். இரவில் உறங்கும் போது கொசு வலைகள் பயன்படுத்துவது கொசுக்கடியிலிருந்து பாதுகாக்கும். கொசு விரட்டிகள், கொசு சுருள்கள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பது கொசுக்களின் பெருக்கைத் தடுக்கும்.