நவம்பர் 19, சென்னை (Chennai): சென்னையில் ஏரியாவுக்கு ஏரியா பிரபலமான ஆலடிப்பட்டியான் காபி மற்றும் அல்வா கடையில் சென்னையில் உள்ளவர்கள் கண்டிப்பாக கருப்பட்டி காபியை ஒரு முறையாவது சுவைத்திருப்பார்கள். பலருக்கும் இந்த ஆலடிப்பட்டியான் கருப்பட்டி காபி மற்றும் அல்வா கடை (Aladipattiyan Halwa Kadai Karupatti Coffee) பிடித்தமான ஒன்றாக உள்ளது. இந்த கடையின் உரிமையாளர்களில் ஒருவரான கருப்பசாமி தங்கள் பயணத்தை பகிந்து கொண்டார்.
திருநெல்வேலி என்றாலே நெல்லைத் தமிழும், அல்வாவும் தான் ஸ்பெஷல். அதிகளவு பனை உற்பத்தி செய்யப்படும் திருநெல்வேலியில், கருப்பட்டியில் செய்யும் பாரம்பரிய பண்டங்களும் அதிகம். திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு படிப்பிற்காக வந்த 6 மாணவர்கள் இணைந்து உருவாக்கியதே இன்று சென்னையில் 30க்கும் மேற்பட்ட ஆலப்பட்டியான் கருப்பட்டி காபி மற்றும் அல்வா கடை கிளைகளை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். சமீபத்தில் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன், தனது மகளுடன் மண்ணிவாக்கத்தில் உள்ள ஆலடிப்பட்டியான் காபி மற்றும் அல்லவா கடையின் கிளையில் கருப்பட்டி காபியை அருந்திய புகைப்படம் வைரலானது. International Men's Day 2024: "நீ இருக்கும் வாழ்க்கை அழகாக இருக்கிறது" இன்று சர்வதேச ஆண்கள் தினம்..!
இனிப்பான ஆரம்பம்:
எம்.பி.யே படிப்பை, திருநெல்வேலி சுரண்டை என்னும் கிராமத்தை சேர்ந்த 6 இளைஞர்கள் எஸ் ஆர் எம் கல்லூரியில் பயின்று வந்துள்ளனர். படிக்கும் காலத்தில் வீட்டிற்கும் சென்று வருகையில் அல்வா போன்றவை வாங்கி வந்து கல்லூரியில் பிற மாவட்ட நண்பர்களுக்கு தருவதை வழக்கமாக கொண்டுள்ளர். பின்னர் கல்லூரியில் படிப்புச் சார்ந்த நடக்கும் தொழில் முனைவோருக்கான ஸ்டால்களில்,‘அல்வா கடை’ என்ற பெயரில் ஸ்டால் அமைத்து, தங்கள் ஊரிலிருந்து அல்வா காரம் போன்றவைகளை செய்து எடுத்து வந்து விற்பனை செய்துள்ளனர். இதன் டேக்லைன் ஆக ‘டிரெடிஷனல் டேஸ்ட் ஆஃப் சௌத் இந்தியா’ எனவும் வைத்துள்ளனர். அதில் மற்றவர்களை விடவும் அதிக வசூல் பெற்று இந்த நண்பர்கள் குழு, ‘இண்டிவியூசுவல் மார்கெட்டர் அவார்ட்’ பெற்றனர். அதன் பின்னரே, நகரத்தில் பாரம்பரிய உணவுகளுக்கு உள்ள தேவையை அறிந்து கொண்டனர். படிப்பிற்கு பிறகு இதன் மார்கெட் அதிகம் உள்ளதால் இதையே தொழிலாக எடுத்துச் செய்துள்ளனர். அதிக முதலீடு இல்லாததால், சிறிய ஸ்டால் ஆங்காங்கு போட்டு விற்பனை செய்து அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு ஆன்லைனில் வியாபாரம் செய்யத் தொடங்கினர்.
அல்வாக்கடை டாட் காம்:
‘அல்வாகடை.காம்’ என்ற பெயரில் இணையதளத்தில் வியாபாரம் செய்யத் தொடங்கியுள்ளனர். திருநெல்வேலியிலிருந்து நேரடியாக கிடைப்பதால் அதிக மக்கள் ஆர்வத்துடன் வாங்கவும் தொடங்கியுள்ளனர். இவர்களின் அல்வாவிற்கு ஆரம்பித்த 1 மாதத்திலேயே முகநூல் பக்கத்தில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் பின்தொடர ஆரம்பித்துள்ளனர். இதை ஊக்கமாக எடுத்து அல்வாக்களின் வகைகளை அதிகரித்து, அனைத்து இடங்களுக்கும் அனுப்பத் தொடங்கியுள்ளனர். சென்னை மட்டுமன்றி நாட்டின் பல இடங்களில் இருந்தும் ஆர்டர் வர ஆரம்பித்துள்ளது. மேலும் பண்டிகை காலங்களில் பெரிய அளவிலும் ஆர்டர்களை எடுத்து வந்துள்ளனர். பின்னர் துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா, போன்ற நாடுகளுக்கும் திருநெல்வேலி அல்வாவை கிடைக்கச் செய்துள்ளனர். கருப்பட்டியில் செய்த அல்வாக்கள் அதிகமாக விற்பனை ஆனதால் கருப்பட்டில் காபியையும், இனிப்புகளை செய்து கொண்டு வந்து விற்பனை செய்யத் தொடங்கினர். முதலில் 7 பண்டங்களில் தொடங்கியவர்கள் தற்போது 40க்கு மேற்பட்ட பொருட்களை விற்கின்றனர். Mysore Pak Recipe: வீட்டிலேயே சுவையாக மைசூர் பாக் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
நெல்லையின் கருப்பட்டி:
தங்கள் கருப்பட்டிக் கடையின் வளர்ச்சி குறித்து கருப்பசாமி கூறுகையில், இவர்களின் அனைத்து கிளைகளுக்கும் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரில் தயாரிக்கப்படும், இனிப்பு, காரம் போன்ற ஸ்நேக்ஸ்கள் திருநெல்வேலியிலிருந்து தினமும் பஸ்கள் மூலம் கொண்டுவரப்படுகின்றன. சில பொருட்கள் மட்டுமே அந்தந்த கிளைகளில் தயாரிக்கப்படுவதே காரணம் என்கிறார்.
மக்களை தங்களின் கடைகளுக்கு ஈர்க்க வைப்பது, கடையின் பெயரும் அதன் கூரை அமைப்புமே. மக்களை ஒரு கிராமத்து சூழலில் அமைக்க வேண்டும் என்பதற்காக கூரை அமைப்பில் காபி கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுரண்டையில் தங்களின் சொந்த ஊரான ஆலடிப்பட்டி என்னும் கிராமத்திலிருந்து உள்ளூர் மக்களால் தயாரித்து எடுத்து வந்து விற்பதால் தான் இதற்கு ஆலடிப்பட்டியான் என்ற பெயரையும் வைத்தோம் என்கிறார் கருப்பையா.
செய்து காட்டிய நண்பர்கள்:
சிறிய அளவில் தொடங்கி உலகெங்கும் தெரியும் அளவிற்கு தற்போது கடையை பெரிய அளவில் சாதாரணமாக கொண்டு வரவில்லை. ஆரம்பத்தில், அனைவரின் வீட்டிலும் எதிர்ப்பே கிடைத்துள்ளது. நண்பர்கள் அனைவரும் ஒன்றாக படிப்பதிலிருந்து தொழில் தொடங்குவதை வரை குடும்பத்தினரும், சுற்றத்தாரும் எதிர்ப்பையே காட்டியிருக்கின்றனர். சென்னை சென்று படித்து வேலைக்கு செல்லாமல், அல்வா விற்கிறீர்கள் என விமர்சித்துள்ளனர். இவற்றையும் தாண்டி நண்பர்கள் அனைவரும் சேர்ந்து விமர்சித்தவர்களை, தங்கள் செய்கையால் வாயடைக்க வைத்திருக்கின்றனர் நெல்லை இளைஞர்கள்.